Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் பண்ண தப்ப.. நீங்க பண்ணிராதிங்க.. மேடையில் ஓப்பனாக பேசிய கார்த்தி!
சென்னை: கொம்பன் வெற்றிக்குப் பிறகு மீண்டும் முத்தையா இயக்கத்தில் கார்த்தி தற்போது விருமன் என்ற படத்தில் நடித்து வருகிறார்
Recommended Video
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியன் செல்வனில் வல்லவராயன் வந்தியத் தேவனாக கார்த்தி நடித்து வருகிறார்
இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி நான் பண்ண தப்ப நீங்க பண்ணிராதிங்க என மேடையில் மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார்.
காபி குடிக்க ஏன்மா இத்தனை ரியாக்ஷன்.. ஷிவானி நாராயணனை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பொன்னியன் செல்வன்
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே வித்தியாசமான கதைக்களத்தில் தான் இருக்கும். நல்ல கதைக்காக பெரிதும் மெனக்கெடும் கார்த்தியின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தமிழைப்போலவே தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. கடைசியாக கார்த்திக்கு சுல்தான் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. வசூல் ரீதியாக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியன் செல்வனில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை வேடத்தில்
இரும்புத்திரை ,ஹீரோ என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து வரும் படத்திற்கு சர்தார் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் மட்டுமே இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அந்த வகையில் சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். வயதான தோற்றத்தில் ஒரு வேடமும் இளமையான போலீஸ் அதிகாரி வேடத்தில் ஒரு வேடத்திலும் நடித்து வருகிறார்.

ஷங்கரின் மகள் அதிதி
கொம்பன் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் விருமன் படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பேச்சுலர் பட இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வாறு இந்த படங்களில் பிஸிசியாக நடித்து வரும் கார்த்தி நான் பண்ண தப்ப நீங்க பண்ணிராதிங்க என கேட்டுக் கொண்டுள்ளார்.

யார் கூடையும் கம்பேர் பண்ணாதீங்க
கார்த்தி அடிக்கடி செய்யும் தவறு தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது. அந்தத் தவறை நீங்கள் யாரும் செய்யாதீர்கள். நாம யாருக்கும் கீழேயும் இல்ல நாம யாருக்கு மேலேயும் இல்ல நம்ம யாருக்கும் ஈகுவலாவும் இல்லை நம்ம தனி ரகம். அதனால வாழ்க்கையில எந்த சூழ்நிலையிலும் யார் கூடையும் ஒப்பிட்டு பாருங்க. இன்னொருத்தரோட வெற்றிக்காக சந்தோஷப்படுங்கள்.

மத்தவங்க வெற்றிக்கு சந்தோஷப்படுங்கள்
இன்னொருத்தருக்கு நமக்கு கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் சந்தோஷப்படுங்கள். எத்தனையோ பிரச்சினைகளை தாண்டி தான் ஒவ்வொருத்தரும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்போது அடுத்தவங்களோட வெற்றிக்காக நம்ம சந்தோசப்பட ஆரம்பிச்சா நம்ம மனசு இலகுவாகும் சந்தோசமாகவே இருக்கும் என அகரம் பவுண்டேஷன் விழாவில் கார்த்தி புத்துணர்ச்சியுடன் ஓபனாக பேசிய பேசியுள்ளார்.