Dude Day 4 Official Box Office: இட்லி கடை லைஃப் டைம் காலி.. அடுத்து மதராஸி தான்.. 4 நாட்களில் டியூட் வசூல்!
சென்னை: கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். 20 கோடி, 30 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலே 100 கோடி முதல் 150 கோடி வரை வசூல் உறுதி என்பதை தொடர்ந்து சாதித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த டியூட் படத்தின் 4வது நாள் அதிகாரப்பூர்வ வசூலும் வெளியாகி விட்டது.
இந்த ஆண்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அதிகபட்சமாக 200 கோடி வசூல் ஈட்டியது. ஆனால், படத்தின் பட்ஜெட்டே அஜித்தின் சம்பளத்தை சேர்த்து 200 கோடி வந்திருக்கும் என்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு அந்த படம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்றும் பிரதீப் ரங்கநாதனை வைத்து 27 கோடி பட்ஜெட்டில் எடுத்த டியூட் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இதுவரை 83 கோடி ரூபாய் வசூலை வாரிக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இட்லி கடை காலி: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்பநிதி வெளியிட்ட தனுஷின் இட்லி கடை திரைப்படம் இதுவரை உலகளவில் 73 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ள நிலையில், 4 நாட்களில் ஏற்கனவே கணித்ததை போலவே பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் 83 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இட்லி கடை படத்தின் லைஃப் டைம் வசூலை காலி செய்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை பலரும் பாராட்டினர். டியூட் படத்தை பலரும் கழுவி ஊத்தினாலும் ஜென் ஸி கிட்ஸ் படத்தை பிளாக்பஸ்டராக மாற்றிவிட்டனர்.

அடுத்து மதராஸி: இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் மதராஸி, விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, அஜித் குமாரின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை ஈட்டியுள்ள நிலையில், இன்று இரவுக்குள் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் இன்னும் ஒரு 17 கோடி வசூலை அள்ளி 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் அசால்ட்டாக இணைந்துவிடும் என்கின்றனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சுமார் 20 கோடி வசூலை டியூட் அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு மறுபடியும் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் மூலம் பெரிய இலக்கை நிர்ணயிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
200 கோடி வாய்ப்பிருக்கா?: முதல் 5 நாட்களிலேயே டியூட் திரைப்படம் 100 கோடி வசூல் செய்தால், அடுத்தடுத்த வாரங்களிலும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தால் 200 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கூறுகின்றனர். கண்டிப்பாக டிராகன் படத்தின் 150 கோடி வசூலை டியூட் கடக்கும் என்பது உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











