கோலிவுட்டில் யார் அடுத்த விஜய்?.. ட்யூட் பிரதீப் ரங்கநாதனின் ஸ்மார்ட் பதில்.. சிவகார்த்திகேயனை சொல்லலையே?
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அவர் ஜனநாயகன் படத்தோடு திரைத்துறைக்கு டாட்டா சொல்லவிருக்கிறார். இதனையடுத்து கோலிவுட்டில் யார் அடுத்த விஜய் என்ற பட்டிமன்றம் போய்கொண்டிருக்கிறது. எஸ்கே ரசிகர்களோ சிவகார்த்திகேயனே அடுத்த விஜய் என்று சொல்ல; ஒருதரப்பினர் அதனை பங்கமாக கலாய்த்துவருகிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான இதற்கு ஸ்மார்ட்டான பதில் அளித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; அதில் முழுக்க முழுக்க கவனத்தை திருப்பியிருக்கிறார். எனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று விஜய் அறிவித்திருந்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பொறுத்துதான் விஜய் திரைத்துறையில் தொடர்வாரா இல்லை ஷட்டரை சாத்துவாரா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்பது தனிக்கதை.
யார் அடுத்த விஜய்?: இது ஒருபக்கம் இருக்க யார் அடுத்த விஜய் என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்ததில் இருந்து அடுத்த தளபதி விஜய் சிவாதான் என்று ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன. அதற்கேற்றபடிதான் அவரது மார்க்கெட்டும் இருக்கிறது. ஆனால் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று எஸ்கேவே சொல்லிவிட்டாலும்; ரசிகர்கள் விடுவதாக இல்லை.

கலாய்த்தலும் இருக்கு: சிவகார்த்திகேயனை அந்த ரேஸில் நிறுத்தியதிலிருந்து அவரை ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோரெல்லாம் கலாய்க்கவும் செய்கிறார்கள். தனது ட்வீட்டில் எஸ்கேவை குறிப்பிடுகையில் திடீர் தளபதி என்றே விளிப்பார் மாறன். அதேசமயம் அடுத்த விஜய்யாக மாறுவதற்கான அத்தனை தகுதிகளும் எஸ்கேவுக்கு இருக்கிறது என ரசிகர்கள் விட்டுக்கொடுக்காமல் பேசிவருவது மறுபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
குறுக்கே இந்த கௌஷிக் வந்தால்?: நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்பது போல் பிரதீப் ரங்கநாதன் வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து அவர்தான் அடுத்த விஜய், தனுஷ் என்றெல்லாம் கம்புகளும் சுற்றப்படுகின்றன. இந்நிலையில் அவர் நடித்திருக்கும் ட்யூட் படம் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அப்படி ஒரு ப்ரோமோஷனில் அடுத்த விஜய் யார் என்ற கேள்வி முன்வைக்கபப்ட்டது.
பிரதீப்பின் பதில்: அதற்கு பதிலளித்த அவர், "விஜய்யின் இடத்தை யாராலுமே நிரப்ப முடியாது. அவர் இந்த உயரத்தை தொட்டதற்கு காரணமே அவரிடம் 30 உழைப்பு இருக்கிறது. ரஜினியோ, கமலோ, விஜய்யோ, அஜித்தோ அவர்கள் இன்று இவ்வளவு வெற்றியடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு கதையெல்லாம் காரணம் இல்லை. ரசிகர்கள்தான் முக்கிய காரணம். அடுத்து யார் அந்த உயரத்தை தொடுகிறார்கள் என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிப்பார்கள். 30 வருடங்களில் பார்க்கலாம்" என்றார்.
எதிர்பார்ப்பில் ட்யூட்: முன்னதாக கீர்த்திவாசன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்கு முன்னதாக அவர் நடித்த டிராகன், லவ் டுடே ஆகிய இரண்டு படங்களுமே நூறு கோடி ரூபாயை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. எனவே இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களிடமும், திரைத்துறையில் பெரிய ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











