»   »  மிகச் சிறந்த இந்திய மொழி, ஆங்கிலம்! - சொல்கிறார் கமல் ஹாஸன்

மிகச் சிறந்த இந்திய மொழி, ஆங்கிலம்! - சொல்கிறார் கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு விழா சமீபத்தில் தொடங்கியது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இந்த விழாவை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார்.

English is the best Indian Language, says Kamal Hassan

இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, கமல் ஹாசன், கபில் தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்த விழாவில் ராணி எலிசபெத்தைச் சந்தித்துப் பேசினார் கமல்.

அப்போது இந்த விழா குறித்து பேசிய கமல், "என்னுடைய பெயரை மோடி தேர்ந்தெடுத்தார் என்பதே எனக்குக் கெளரவமான விஷயம். இந்தியா மற்றும் இங்கிலாந்தின் வரலாற்றைக் கொண்டாட இது சரியான தருணம். ஆங்கில மொழி அதற்குச் சரியான உதாரணம். ஆங்கிலம், இந்தியர்களை இணைக்கும் மிகச் சிறந்த இந்திய மொழி... இந்தியாவின் சிறந்த மொழி என்று நான் அவ்வப்போது கூறுவதுண்டு. அதில் எப்போதும் மாற்றுக் கருத்தில்லை," என்றார்.

வெள்ளைக்காரன் தேசத்தில் இங்கிலீஷ்காரனா இருந்தாத்தானே புத்திசாலித்தனம்!!

English summary
Recently Kamal Hassan says that English is the best Indian language.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil