»   »  சசிக்கு சிறை: உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா- கமலை புகழும் ரசிகர்கள்

சசிக்கு சிறை: உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா- கமலை புகழும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: கமல் ஹாஸன் ட்வீட்டுவது புரியாவிட்டாலும் அவரது துணிச்சலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

தமிழக அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இன்று சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் அவர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்தார்.

தீர்ப்பு வந்த கையோடு ட்வீட்டியிருந்தார் கமல்.

புரியவில்லை

புரியவில்லை

கமல் சார் நீங்கள் ஆங்கிலத்தில் ட்வீட் செய்தாலும் சரி, தமிழில் ட்வீட் செய்தாலும் சரி ஒன்னுமே புரியவில்லை என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

துணிச்சல்

புரிகிறதோ, புரியவில்லையோ துணிந்து ட்வீட் போடும் கமலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, @ikamalhaasan உங்கள் துணிச்சல் எவருக்கும் இருந்ததில்லை.. சூப்பர் சார்..

ரசிகன்

@ikamalhaasan நீதியும் சட்டமும் நிலை நிறுத்தி கொண்டன ஐயா.
என்றும் உங்கள் சமுக அக்கறை
போற்றத்தக்கது🙏
உரக்க சொல்வோம் உங்கள்
ரசிகர்கள் என்று.

அர்த்தம்

@ikamalhaasan நிஜ ஹீரோ!! உங்களை மதிக்கிறேன் சார்!!! உங்கள் மெசேஜ்களின் கருத்து பெரும்பாலும் புரியாவிட்டாலும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது.

உண்மை

@ikamalhaasan உண்மைக்கு குரல் கொடுப்பதில் உன்னைப்போல் இன்னொருவன் இல்லை !!

வாக்கு

@ikamalhaasan தலைவா உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா

English summary
Kamal Haasan fans say that though they don't understand his messages, they appreciate his guts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil