ஒரு போட்டோவை வைத்து இத்தனை ஆராய்ச்சியா...இணையத்தை அலற விடும் ஏகே ஃபேன்ஸ்
சென்னை : வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்த ஒரு போட்டோவை வைத்து சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய ஆராய்ச்சி மற்றும் விவாதத்தையே நடத்தி உள்ளனர் அஜித் ரசிகர்கள். இதனால் இந்த போட்டோ அதிகமானவர்களால் பகிரப்பட்டுள்ளது.
ஹச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவதாக தயாராகி உள்ள படம் வலிமை. இந்த படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கடைசி நிமிடத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

விரைவில் ஏகே 61 ஷுட்டிங்
வலிமை படம் முடிவடைவதற்கு முன்பே இதே கூட்டணி மீண்டும் இணைய உள்ளதை உறுதி செய்து விட்டார்கள். ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் தல 61 என இந்த படம் கூறப்பட்டது.

இந்திய சினிமாவில் முதல் முறையாக
ஏகே 61 படத்தில் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறாராம். அதுவும் ஹீரோ, வில்லன் ரோல்களில் நடிக்க போகிறாராம். ஏகே 61 படத்தின் கதை இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே எடுக்கப்படாத கதையாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

அஜித்–போனி கபூர் சந்திப்பு
இந்த நிலையில் மும்பையில் உள்ள போனி கபூரின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திற்கு திடீர் விசிட் செய்துள்ளார் அஜித். போனி கபூர் - அஜித்தின் இந்த திடீர் சந்திப்பு போட்டோ அஜித் ரசிகர்களால் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அஜித்தின் லுக் தான்.

பழைய போட்டோவா
இந்த போட்டோவில் அஜித், பெரிய வெள்ளை தாடி மற்றும் மீசையுடன் உள்ளார். விஸ்வாசம் படத்தில் வரும் லுக்கில் இருப்பதால் இந்த போட்டோ தற்போது எடுக்கப்பட்டது கிடையாது. விஸ்வாசம் சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை தான் போனி கபூர் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பும் தற்போது நடைபெற்றது இல்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு விஸ்வாசம் படத்தில் நடித்த போது அஜித் எடுத்துக் கொண்ட பிற போட்டோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஏகே 61 லோடிங்கா
இன்னும் சிலர் ஏகே 61 லோடிங்கா என கேட்டுள்ளனர். ஏகே 61 படத்தின் ஷுட்டிங் மார்ச் மாதம் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் திடீரென மும்பை சென்று போனி கபூரை சந்தித்துள்ளதற்கு என்ன காரணம் என அஜித் ரசிகர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். இந்த போட்டோ வெளியான சிறிது நேரத்திலேயே #AK61, #Valimai, #Ajithkumar போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டு விட்டன.


Click it and Unblock the Notifications











