என்ன சொல்றீங்க விஜய் டிவியில் வருகிறாரா?...ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை : விஜய்யின் மாஸான பேச்சை பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழாவில் கேட்கலாம், ப்ரொமோஷன் விழாவில் கேட்கலாம் என எதிர்த்து காத்திருந்து, ஏமாந்து போய் இருக்கும் ரசிகர்களுக்கு ஸ்வீட்டான தகவல் ஒன்று அப்டேட்டாக வந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யின் 65 ம் படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யின் மாஸ் பஞ்ச் டயலாக்
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என விஜய் பேசிய பஞ்ச் டயலாக் செம வைரலானது. இதற்கு பிறகு விஜய் எப்போது பேசுவார், என்ன பேச போகிறார் என கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்
மாஸ்டர் படத்தை போல் பீஸ்ட் ஆடியோ விழாவிலும் பஞ்ச் டயலாக், அரசியல் தொடர்பாக ஏதாவது அறிவிப்பு வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் விஜய் பேச்சை கேட்க முடியாமல் ஏமாந்து போன ரசிகர்கள், ப்ரொமோஷன் விழாவிலாவது விஜய் பேசுவார் என மனதை தேற்றிக் கொண்டனர்.

விஜய் பேட்டி கொடுக்கிறாரா
பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மார்ச் 31 ம் தேதி வெளியிடப்படும் என தகவல் பரவி வரும் நிலையில், மற்றொரு புதிய தகவலாக பீஸ்ட் படத்தின் ரிலீசை முன்னிட்டு பீஸ்ட் படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக பேட்டி கொடுத்த ஷுட்டிங் இன்று நடத்தப்படுகிறது. இந்த பேட்டி ஏப்ரல் 10 ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம்.

டிவியில் வரபோகிறாரா விஜய்
இதன் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு டிவியில் தோன்றி விஜய் பேட்டி அளிக்க உள்ளார். அதனால் விஜய்யின் மாஸான பேச்சை கேட்க ரசிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

ஆர்ஆர்ஆர் படத்தில் பீஸ்ட் டிரைலர்
ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் ரிலீசாவது உறுதியாகி விட்டதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஆர்ஆர்ஆர் படத்துடன் பீஸ்ட் டிரைலர் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாம். இதனால் ஏப்ரல் 2 ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு பீஸ்ட் டிரைலர் வெளியிடப்பட உள்ளது கிட்டதட்ட உறுதியாகி விட்டதாம். ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் படத்துடன் பீஸ்ட் அரபிக்குத்து பாடல் திரையிடப்பட்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.


Click it and Unblock the Notifications











