Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இரண்டு ஆண்டுகள் தவம் இன்று கிடைத்தது தல தரிசனம்!
சென்னை : இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ளது
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்
ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் தல தரிசனத்தை கண்டு உற்சாகம் அடைந்து வருகின்றனர்
அஜித்தை பின்பற்றும் ஹெச்.வினோத்...இப்படியே போனால் வலிமை வலுவிழந்துவிடும்!

வயதான தோற்றத்தில் வழக்கறிஞராக
திரும்பும் இடமெல்லாம் வலிமை அப்டேட் எங்கே என ரசிகர்களின் வேண்டுகோள்கள் நாடுகளை கடந்து கடல்களை கடந்து ஒருமித்து கேட்டுக் கொண்டிருந்தது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவான இந்தப் படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார் . சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று , என இயக்கிய இரண்டு திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களின் மனதில் தனியிடத்தைப் பிடித்தது. இயக்குனர் வினோத் அஜித்துடன் கூட்டணி அமைத்து பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி படமான பிங்க் திரைப்படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது . இந்த படத்தில் நடிகர் அஜித் வயதான தோற்றத்தில் வழக்கறிஞராக பட்டையை கிளப்பியிருப்பார்.

மன வலிமை
நேர்கொண்ட பார்வை மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அஜித்,வித் வினோத் கூட்டணி மீண்டும் இப்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலிமை அப்டேட் எங்கே என ரசிகர்கள் ஒருமித்தவாரு கேட்டுக்கொண்டே இருந்தனர்.

அதிரடி ஆக்ஷன்
ட்ரைலர் மூலம் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டுள்ளது. ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த படத்தில் அஜித் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அஜித்துக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றான பைக் ரேஸ் காட்சிகள் இந்த படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன எனவே ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் திரில்லர் அதிரடி ஆக்சன் திரைப்படமாக இந்தப் படம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
Recommended Video

தல தரிசனம்
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உருவாகிவரும் வலிமை படப்பிடிப்பு முடிந்து படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது இந்த நிலையில் பொங்கலுக்கு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது. இந்நிலையில் குறித்தது போல பிப்ரவரி 24ஆம் தேதி இன்று ரசிகர்களின் படைசூழ வலிமை திரைப்படம் திருவிழாக்கோலம் பூண்டு திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிகிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு அதிரடியான வசனங்கள் அஜித்தின் மிரட்டலான நடிப்பு என இந்த படத்தை இயக்குனர் வினோத் பார்த்து பார்த்து அஜித் ரசிகர்களுக்காகவே செதுக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். மேலும் நடிகை ஹூமா குரேஷி மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் பக்காவாக நடிப்பைக் கொடுத்து சென்றுள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துள்ளார். ரசிகர்கள் எல்லாம் திருவிழா போல கொண்டாடும் வலிமை ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவும் மேலாக இருக்கிறதா என பல விதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம் .