For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆள் சும்மா அழகா ஆகிட்டே போறாரு.. வசீகரிக்கும் லுக்கில் சிம்பு.. ஹார்ட்டீன்களை குவிக்கும் ரசிகைகள்!

  |

  சென்னை: கெளதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஓடாய் தேய்ந்து நிற்கும் சிம்புவை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  என்ன மனுஷன் இப்படி ஆகிட்டாரேன்னு சிம்புவின் ரசிகர்கள் கவலைப்பட்டனர்.

  இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிர் காக்க உதவுங்கள்

  இந்நிலையில், ரசிகர்களின் கவலைகளை போக்கும் வண்ணம் செம ஸ்மார்ட்டாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் நடிகர் சிம்பு.

  சிக்ஸ் பேக்கில் அசத்தும் சிம்பு… வெந்து தணிந்தது காடு மாஸா போகுது… குஷியில் ரசிகர்கள் !சிக்ஸ் பேக்கில் அசத்தும் சிம்பு… வெந்து தணிந்தது காடு மாஸா போகுது… குஷியில் ரசிகர்கள் !

  பாடி ஷேமிங்

  பாடி ஷேமிங்

  பெரும்பாலும் நடிகைகள் சந்திக்கும் பாடி ஷேமிங் போன்ற விஷயத்தை நடிகர் சிலம்பரசனும் சமீபத்தில் சந்தித்தார். உடல் எடை அதிகமாகிவிட்டது என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் சிம்புவின் முன்பு வைக்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் உடைத்து எறியும் வகையில் கடின உழைப்பை செலுத்தி ஸ்லிம் சிம்புவாக மாறியுள்ளார்.

  விடிவி கூட்டணி

  விடிவி கூட்டணி

  கெளதம் மேனன், சிம்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் இன்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நிற்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மூவரும் இணைந்து உருவாக்கிய அச்சம் என்பது மடமையடா படமும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், மீண்டும் அதே கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறது.

  ரெட் கார்டு

  ரெட் கார்டு

  சிம்பு இனி சினிமாவிலேயே நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார்கள் குவிந்து மறைமுகமாக அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது. ஆனால், எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு ரெக்கார்டுன்னு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வந்தாலும் அவரது உடல் தோற்றம் காரணமாக அந்த படம் எடுபடவில்லை.

  குடியை நிறுத்தி

  குடியை நிறுத்தி

  தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த மதுவை முதலில் நிறுத்த வேண்டும் என நினைத்த சிம்பு குடியை முழுவதுமாக நிறுத்தி விட்டு உடல் பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கடின உடல் பயிற்சி காரணமாக உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஆளே மாறி விட்டார் சிம்பு.

  ஷூட்டிங் வர மாட்டார்

  ஷூட்டிங் வர மாட்டார்

  நடிகர் சிம்பு பெரும்பாலும் பகலில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வரமாட்டார் என்கிற விமர்சனங்களையும் அவரை வைத்து படமெடுத்தால் பல காலம் ஆகும் என்கிற ட்ரோல்களையும் ஈஸ்வரன் படத்தை ஒரே மாதத்தில் முடித்துக் கொடுத்து ஒரே அடியாக முறியடித்தார்.

  செம ஸ்பீடு

  செம ஸ்பீடு

  அதே வேகத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள மாநாடு படத்தையும் எவ்வளவு விரைவாக முடித்துக் கொடுக்க முடியுமோ செம ஸ்பீடில் முடித்துக் கொடுத்தார். டே, நைட் என ஷூட்டிங் செல்ல, கேரவனுக்கு சென்று ரெஸ்ட் எடுப்பதை கூட தவிர்த்து விட்டு, இரவு நேரத்தில் மண் தரையில் படுத்த சிம்புவின் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

  கார்த்திக் டயல் செய்த எண்

  கார்த்திக் டயல் செய்த எண்

  இயக்குநர் கெளதம் மேனன் கடந்த ஆண்டு போடப்பட்ட லாக் டவுனில் மீண்டும் சிம்பு மற்றும் திரிஷாவை வைத்து வீட்டிலேயே ஒரு ஷார்ட் பிலிமை எடுத்து அசத்தினார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்த கார்த்திக் டயல் செய்த எண் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இதே கூட்டணியில் விடிவி 2 உருவாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

  நதிகளிலே நீராடும் சூரியன்

  நதிகளிலே நீராடும் சூரியன்

  சிம்பு, கெளதம் மேனன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் நதிகளிலே நீராடும் சூரியன் என்கிற டைட்டிலில் புதிய படமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை சட்டென்று மாறுது வானிலை டைட்டில் எப்படி மாறியதோ அதே போல இந்த படத்தின் டைட்டிலும் மாறி தற்போது வெந்து தணிந்தது காடு என உருவாகி வருகிறது.

  20 கிலோ எடை குறைப்பு

  20 கிலோ எடை குறைப்பு

  ஈஸ்வரன், மாநாடு படத்தில் பார்த்த சிம்புவுக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் பார்த்த சிம்புவுக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறதே என ரசிகர்கள் ஆச்சர்யப்பட சுமார் 20 கிலோ எடையை குறைத்து இந்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகின.

  வசீகரிக்கும் சிம்பு

  வசீகரிக்கும் சிம்பு

  அந்த ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் என்ன சிம்பு இப்படி துரும்பா ஆகிட்டாரே என ஃபீல் பண்ணிய நிலையில், தற்போது சிம்பு வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தில் நல்ல ஃபிட்டான உடல் தோற்றத்தில் நீச்சல் குளம் அருகே ரெட் கலர் பனியன் அணிந்து கொண்டு வசீகரிக்கும் சிம்புவாக உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

  ரெடி செட் கோ

  ரெடி செட் கோ

  மேலும், அதற்கு கேப்ஷனாக ரெடி.. செட்..கோ! என கேப்ஷன் கொடுத்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்கள், அடுத்ததாக உருவாக உள்ள சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

  ஹார்ட்டீன் விடும் ரசிகைகள்

  ஹார்ட்டீன் விடும் ரசிகைகள்

  ரசிகர்களை போலவே சிம்புவுக்கு ரசிகைகள் பட்டாளமும் எப்போதும் அதிகம் தான். அதுவும் சிம்புவை இவ்வளவு அழகாக மீண்டும் பார்த்த ரசிகைகள் அவரது போட்டோவுக்கு கீழே ஏகப்பட்ட ஹார்ட்டீன்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil
  ஒடிடி பேச்சு

  ஒடிடி பேச்சு

  தனுஷின் ஜகமே தந்திரம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், சிம்புவின் மாநாடு படத்தையும் வாங்கி வெளியிட நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தியேட்டர்கள் திறப்புக்காக சிம்பு காத்திருக்கிறார் என்றும், அதன் பிறகு தான் ஒடிடியில் மாநாடு வெளியாகும் என்றும் படக்குழு உறுதியாக இருக்கிறது.

  English summary
  Silambarasan TR’s latest smart look photo goes viral in social media. He also put a caption Ready, Set, Go! In his tweet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X