Just In
- 3 min ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்!
- 1 hr ago
விரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்!
Don't Miss!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- News
நான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்
- Finance
அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா?
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்திற்கு பூஜை போட்டாச்சு.. பெயர் என்ன தெரியுமா?
சென்னை : நடிப்பு ஒருபுறம் இசை ஒருபுறம் என தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஹிப் ஹாப் ஆதி இப்பொழுது தெலுங்கிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
முதல் இரண்டு திரைப்படங்களும் நட்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியாகியிருந்த நான் சிரித்தால் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சற்று வித்யாசமாக இருந்தது.
சினிமாவில் பாடல்களின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது… இசையமைப்பாளர் ஜிப்ரானின் ஜாலியான பதில்கள் !
இந்த நிலையில் இப்பொழுது தனது நான்காவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கிய ஹிப்ஹாப் ஆதி, அதை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க நெப்போலியன், ஊர்வசி, விதார்த் என பிரபலமான நடிகர்கள் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் பங்கு வகிக்கின்றன.

ஆல்பம் சாங்களுக்கு
தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும், முதன்முறையாக ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்திய பெருமை ஹிப்ஹாப் ஆதியை சாரும். சுந்தர் சி இயக்கிய "ஆம்பள" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஆதி அதற்கு முன் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து நடித்து இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான இண்டிபெண்டன்ட் ஆர்ட்டிஸ்டாக வலம் வந்தார்.

ஹீரோவாக
மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து சற்று வித்தியாசமாகவே இசையமைத்து இளைஞர்களை கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி அடுத்தடுத்து திரைப்படங்களில் இசையமைத்து வர, தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக்கொண்டு "மீசைய முறுக்கு" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து ஹீரோவாகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

தெலுங்கிலும் இசையமைத்து
நடிப்பு ஒருபுறம், இசை ஒருபுறம், இயக்கம் ஒருபுறம் என தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஹிப்ஹாப் ஆதி அதேசமயம் தெலுங்கிலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வர அங்கும் இவரது இசைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

நான் சிரித்தால்
ஹீரோவாக நடித்த முதல் இரண்டு திரைப்படங்களுமே நட்பை மையமாக கொண்டு உருவான நிலையில் சமீபத்தில் வெளியான "நான் சிரித்தால்" கலகலப்பான காமெடி காட்சியுடன் சற்று வித்தியாசமாகவே உருவாகியிருக்க அது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வெற்றியும் பெற்றது.

பூஜையுடன் தொடங்கி
இவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக உயர்ந்து வரும் ஹிப் ஹாப் ஆதி இப்பொழுது தனது அடுத்த திரைப்படத்தின் வேலைகளை பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

"அன்பறிவு"
பிரபல நடிகர்களான நெப்போலியன், ஊர்வசி, சித்தார்த், சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க கதாநாயகியாக சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்த நடிகை காஷ்மிரா இதில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் இதற்கு "அன்பறிவு" என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் தல அஜித்தின் ஃபேவரிட் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க, இது ஒரு ரொமான்டிக் காதல் திரைப்படம் என சொல்லப்படுகிறது.