»   »  அஜித்துக்கு ரசிகன்... விஜய்க்கு தம்பி... இது யார் தெரியுமா..? நம்புங்க, அது நம்ம சிம்புங்க!

அஜித்துக்கு ரசிகன்... விஜய்க்கு தம்பி... இது யார் தெரியுமா..? நம்புங்க, அது நம்ம சிம்புங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித்துக்கு ரசிகன் என்றும், விஜய்க்கு தம்பி என்றும் தன்னைக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நாடறிந்த விசயம். அஜித் பட ரிலீஸின் போதெல்லாம் முதல் ஆளாக ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு முதல்காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சிம்பு. இதனால் அஜித் ரசிகர்களுக்கும் சிம்புவை பிடிக்கும்.

இந்நிலையில், சிம்புவின் வாலு படப் பிரச்சினையில் அவருக்கு உதவியுள்ளார் நடிகர் விஜய்.

விஜயின் தலையீடு...

விஜயின் தலையீடு...

வாலுப் படத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடரப் பட்டதால், படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழு தவித்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையில் நடிகர் விஜய் தலையிட்டார்.

சிக்கல்கள் தீர்ந்தது...

சிக்கல்கள் தீர்ந்தது...

விஜய் முயற்சியால் வாலுவுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சிக்கல்கள் தீர்ந்ததால் படம் ரிலீஸுக்கு தயாரானது.

சிம்பு நன்றி...

சிம்பு நன்றி...

விஜயின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விஜய் அண்ணாவுக்கு நன்றி' எனப் பதிவு செய்தார் சிம்பு.

சிம்புவின் அண்ணன்...

சிம்புவின் அண்ணன்...

இதேபோல் புலி பட விழாவில் பங்கேற்ற டி.ராஜேந்தர், விஜயைப் பாராட்டி பேசினார். ‘சிம்பு இன்னொருவரின் ரசிகராக இருந்தபோதிலும் கூட அவருக்கு விஜய் உதவி இருக்கிறார். சிம்புவின் அண்ணன் விஜய்' என அப்போது அவர் கூறினார்.

அஜித்-விஜய் ரசிகர்கள்....

அஜித்-விஜய் ரசிகர்கள்....

ஏற்கனவே, பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் அஜித் - விஜய் ரசிகர்கள் மோதல்கள் சொல்லி மாளாது. இந்நிலையில், அஜிதின் தீவிர ரசிகரான சிம்பு, விஜயை அண்ணன் எனக் கூறியதால், இருதரப்பும் இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.

சிம்பு பதில்...

சிம்பு பதில்...

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிம்பு. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் எப்போதுமே அஜித்துக்கு உண்மையான ரசிகன்தான். விஜய் எனக்கு எப்போதுமே உண்மையான அண்ணன்' என சிம்பு தெரிவித்துள்ளார்.

English summary
The Actor Simbu has said that, he is fan of actor Ajith and brother of actor Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil