»   »  வெறும் 25% கல்லீரலுடன் உயிர்வாழ்ந்து வருகிறேன் - அமிதாப் பச்சன்

வெறும் 25% கல்லீரலுடன் உயிர்வாழ்ந்து வருகிறேன் - அமிதாப் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வெறும் 25% கல்லீரலுடன் தான் உயிர் வாழ்வதாக ஹெபாபிடிஸ் பி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியிருக்கிறார்.

பாலிவுட்டின் பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் சமீபத்தில் ஹெபாபிடிஸ் பி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

I am Living 25% Liver only : Amitabh Bachchan

அவர் பேசும்போது "எனது உடலில் தற்போது வெறும் 25% கல்லீரல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. கூலி படத்தின் போது எனக்கு விபத்து ஏற்பட்டது, அப்போது சுமார் 200 பேரிடமிருந்து எனக்கு ரத்தம் பெறப்பட்டது.

60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தத்தை ஏற்றினர். அப்போது யாரோ ஒருவரிடமிருந்து எனக்கு ஹெபாடிடிஸ் பி தாக்கியிருகிறது.

பாதிப்பு வெறும் 12% இருக்கும்போதே கவனித்து இருந்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டிருக்கலாம் ஆனால் காலம் கடந்து விட்டது.

தற்போது 25% கல்லீரலுடன் வாழும் சூழ்நிலையில் நான் இருக்கிறேன் ஆனால் நான் எப்போதும் போலவே எனது செயல்களை செய்து வருகிறேன்.

அந்த விபத்திற்குப் பின்னர் 18 வருடங்கள் கடந்து விட்டன ஆனால் நான் நலமுடன் தான் இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

English summary
Bollywood Actor Amitabh Bachchan Says in Recent Hepatitis Programme "Now i am living just 25% liver only".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil