Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சூரியவம்சம் இந்தளவுக்கு ஹிட் ஆகும்ன்னு எதிர்பாக்கல..மனசோடு பேசிய கதை.. சரத்குமார் பெருமிதம்!
சென்னை: 1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூரிய வம்சம்.
விக்ரமன் எழுதி, இயக்கிய சூரியவம்சம் திரைப்படம் அந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக அமைந்தது.
25 ஆண்டுகள் கடந்தும் சூரியவம்சம் திரைப்படம் மக்கள் மனதில் நீங்காத ஒரு படமாக அமைந்துள்ளது, இது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் சரத்குமார்.
அந்த
3
ஹீரோக்களுடன்
மட்டும்
நடிக்க
மாட்டேன்...ஏன்
ஜான்வி
கபூருக்கு
அவங்களுடன்
என்ன
பிரச்சனை?

அசத்தலான நடிப்பு
இயக்குநர் விக்ரமின் படைப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூரியவம்சம். இதில் சரத்குமார், தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன், போன்ற பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா, போன்ற பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்கள். படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆனந்தராஜின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மனைவியை படிக்கவைக்கும் கணவன்
எப்பொழுதும் கிராமத்து கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கும் சரத்குமார். இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். அப்பா கதாபாத்திரத்தில் சக்திவேல் கவுண்டராகவும், மகனாக சின்ராசு என்ற கதாபாத்திரத்திலும் சரத்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களின் சம்மதம் இன்றி தேவயானியை திருமணம் செய்யும் சரத்குமார், அப்பாவின் வெறுப்பை சம்பாதித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். நன்கு படித்த தேவயானியை கலெக்டருக்கு படிக்க வைப்பார், சிறிய லெவலில் பஸ் கம்பெனி தொடங்கி, அதிலிருந்து பெரிய பஸ் கம்பெனிக்கு முதலாளியாக மாறுவார் சரத்குமார். படிக்காதவன் என்று சரத்குமாரை வெறுத்து, படித்த இன்ஜினியரை திருமணம் செய்து கொள்வார் பிரியா ராமன். இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பில் அசத்திய சரத்குமார்
காதல், செண்டிமெண்ட், ஆக்சன் என்று அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்தளித்து இருப்பார் இயக்குநர் விக்ரமன். இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது எஸ் ஏ ராஜ்குமாரின் இசை. இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, சலக்கு சலக்கு, காதலா காதலா போன்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கிட்டத்தட்ட இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்த பிறகும், இப்படத்திற்கான வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

மேடையில் பேசும் அப்பா பெருமை
மகன் சரத்குமார் முன்னேறிய பிறகு தனது அப்பாவின் பெருமைகளை மேடையில் எடுத்துரைக்கும் காட்சிகள் அன்று மட்டும் இன்றும் வேற லெவல் தான். இந்த படத்தின் வெற்றி குறித்து நடிகர் சரத்குமார் சமீபத்தில் கூறியுள்ள விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, சூரியவம்சம் படம் குறித்த சரத்குமார் கூறுகையில், இந்த படம் இந்த அளவு மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்த்த படம் என்ற பெருமையை இன்றும் சூரிய வம்சம் பெற்றுள்ளது. இதுவரை இந்த ரெக்கார்டை எந்த படமும் பிரேக் செய்யவில்லை.

மாட்டுவண்டில வந்து பாத்தாங்க
வேறு ஊரில் இருந்தாலும் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, பஸ், லாரி, வேன் என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக வந்து சூரியவம்சம் படத்தை தியேட்டரில் கண்ட ரசித்தார்கள். நிஜ வாழ்க்கைக்கும் அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை ரசிகர்களிடத்தில் இந்த படம் கொண்டு சேர்த்தது. படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு காட்சி, இந்த சூழ்நிலை நம் குடும்பத்திலும் இருக்கிறதே என்று நினைக்கக் கூடிய அளவிற்கு எதார்த்தமான படைப்பாக இருந்தது சூரிய வம்சம். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வசனம், சென்டிமென்ட் அனைத்தும் ஒர்க் அவுட் ஆனது தான் இந்த படத்திற்கு வெற்றி இன்று தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சரத்குமார்.