»   »  நான் எந்த இயக்குநர் மனதையும் காயப்படுத்தவில்லை... நடிகர் நிவின்பாலி விளக்கம்

நான் எந்த இயக்குநர் மனதையும் காயப்படுத்தவில்லை... நடிகர் நிவின்பாலி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: "எந்த இயக்குநர் மனதையும் நான் புண்படுத்தவில்லை. அப்படி யாராவது நினைத்தால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் நிவின்பாலி கூறியிருக்கிறார்.

மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களான பிரேமம், ஒரு வடக்கன் செல்பி போன்ற படங்களின் நாயகன் நிவின் பாலி.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிரேமம் படம் மலையாள சினிமாவின் மாபெரும் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

I Didn't Hurt Any Director - Nivin Pauly

வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருவதால் மலையாளத்தின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரிடம் கதை சொல்ல முயன்று வருகின்றனர்.

அப்படி நிவின்பாலியை சந்தித்து கதை சொல்ல சென்ற சில இயக்குநர்கள், அவர் தங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக மலையாள திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் மலையாள மனோரமா சேனலின் 2015ன் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2015 ன் சிறந்த நியூஸ்மேக்கர் என்கிற விருதை நிவின் பாலிக்கு வழங்கினர்.

அப்போது மூத்த இயக்குநர் ஹரிகுமார் நீங்கள் இயக்குநர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்கிறீர்களாமே? என்று நிவின் பாலியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நடிகர் நிவின்பாலி "நான் எந்த ஒரு இயக்குநரிடமும் தரக்குறைவாக நடந்து கொள்ளவில்லை. மேலும் நான் இயக்குநர்களை மதிப்பவன், எனது நடவடிக்கைகள் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

English summary
"I Didn't Hurt Any Director.If my Actions have Hurt any Mind i ask Apologize" Malayalam Actor Nivin Pauly Says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil