»   »  என் மகன்களின் தலையை வெட்டுவேன்: ஷாருக்கான் ஆவேசம்

என் மகன்களின் தலையை வெட்டுவேன்: ஷாருக்கான் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மகன்கள் ஆர்யன், ஆப்ராம் எந்த பெண்ணையாவது துன்புறுத்தினால் அவர்களின் தலையை வெட்டிவிடுவேன் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு பெண்கள் சரி சமம் என்று நினைப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பெண்களை அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறி வருபவர்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

மகன்கள்

மகன்கள்

எந்த பெண்ணையும் காயப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் தலையை வெட்டுவேன் என் நான் என் மகன்கள் ஆர்யன், ஆப்ராமிடம் தெரிவித்துள்ளேன். பெண்களை மதிக்க வேண்டும்.

பெண்கள்

பெண்கள்

எந்த பெண்ணையும் வா, போ என்று மரியாதை இல்லாமல் பேசக் கூடாது. யாராக இருந்தாலும் மரியாதையுடன் வாங்க, போங்க என்று பேச வேண்டும் என என் மூத்த மகன் ஆர்யனிடம் தெரிவித்துள்ளேன்.

சட்டை

சட்டை

வீட்டில் சட்டை இல்லாமல் இருக்கக் கூடாது என்று என் மகன்களிடம் கூறியுள்ளேன். தாய், சகோதரிகள் முன்பு சட்டை இல்லாமல் இருப்பது மரியாதை இல்லை. அதனால் எப்பொழுதும் சட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது மகன்களுக்கு நான் இட்டுள்ள கட்டளை.

பெண்

பெண்

நான் பெண்ணாக இருக்க விரும்புகிறேன். பெண்கள் வலுவில்லாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பெண் நடந்து செல்ல என் கோட்டை கழற்றி குட்டையில் போடுபவன் நான்.

English summary
Shahrukh Khan said that he never allows Aryan Khan to remove his shirt at home and he will behead his sons if they will hurt a woman ever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil