»   »  விவசாயி ஆகிறார் விஷால்... தஞ்சையில் நிலம் வாங்கி நெல் பயிரிடப் போவதாக அறிவிப்பு!

விவசாயி ஆகிறார் விஷால்... தஞ்சையில் நிலம் வாங்கி நெல் பயிரிடப் போவதாக அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின், நெல் திருவிழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் விஷால் பேசும்போது '' எந்த நிலையிலும் விவசாயிகள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கக் கூடாது. பிரச்சினைகளுக்கு தற்கொலையைத் தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் பாதி பேர் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

I'm going to buy agriculture land in Thanjavur - Vishal

அதனால் தற்கொலை முடிவைக் கைவிட்டு வாழ்ந்து போராடி வெற்றி பெறுங்கள். கஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன்.

வெறுமனே பத்திரிக்கைககளில் படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. அதனால் தஞ்சாவூர் பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன்.

நேரடியாக விவசாயத்தில் இறங்கினால் தான் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியும்'' என்றார்.

தொடர்ந்து சமூக சேவகியும், நடிகையுமான ரோகினி பேசும்போது '' எந்த ஒரு விவசாயியையும் தோல்வி காண விடமாட்டோம். விவசாயத்தோடு, தைரியத்தையும் சேர்த்து விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

English summary
Actor Vishal says in Recent Event ''I'm going to buy agriculture land in Thanjavur''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil