Just In
- 8 min ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 15 min ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 21 min ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
- 32 min ago
இவர்தான் என் அன்புக்குரியவர்.. காதலரின் மடியில் அமர்ந்து அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
திருப்பூரில் திடீர் என டீ கடைக்குள் நுழைந்த ராகுல் காந்தி- செல்பி எடுத்த ஊழியர்கள்
- Automobiles
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மணிரத்னத்திற்கு நான் வில்லன் அல்ல: அர்ஜுன்

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் தான் ஹீரோ. சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் அர்ஜுன் தான் வில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அர்ஜுன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடல் படத்தில் நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் ஷூட்டிங் துவங்காததால் படத்தைப் பற்றி வேறு எதுவும் கூற இயலாது. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிப்பது இது தான் முதல் தடவை என்பதால் ரொம்ப த்ரில்லாக உள்ளது. இதில் நான் தான் வில்லன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. கடல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் எனக்குத் தெரியும்.
இரண்டாவது நாயகனாக நடிப்பதில் பிரச்சனையில்லை. ஏனென்றால் எனக்கு கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெயர் எடு்த்துவிட்டேன். பாலிவுட்டிலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதில் நான் தான் ஹீரோ என்றார்.