Idli Kadai Day 2 Box Office: இன்பன் உதயநிதி ஹேப்பி அண்ணாச்சி.. இட்லி கடை 2வது நாளிலும் வசூல் வேட்டை!

சென்னை: தனுஷின் மல்லிகைப்பூ போன்ற சாஃப்ட்டான இட்லியின் டேஸ்ட் பிடித்த நிலையில், தொடர்ந்து இட்லி கடை படம் 2 நாள் விடுமுறை நாளை அழகாக பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. காந்தாரா சாப்டர் 1 தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தினாலும், என்னோட ஊர் மக்கள் என்னை கை விட மாட்டாங்க என கோவை, மதுரை, திருச்சி என தனுஷ் ப்ரோமோஷன் நடத்தியது வீண் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து எப்படி காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியானதோ அதே போல தமிழ்நாட்டிலும் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியானது. ஆக்‌ஷன் காட்சிகளுடன் ஹெவியாக கத்திக் கொண்டு சண்டை போடும் வஞ்சகம் நிறைந்த படங்களை விட சில ஃபீல் குட் படங்களையும் குடும்பத்துடன் மக்கள் வந்து பார்த்து, குழந்தைகளுக்கு நல்ல புத்தியை சொல்லிக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ள தனுஷ் படத்தை பலரும் பார்த்து வருகின்றனர்.

Idli Kadai Day 2 Box Office Inban Udhayanidhi happy after Dhanush movie gives good collection
Photo Credit:

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என 2 விடுமுறை நாட்களையும் தமிழ்நாட்டில் இந்த இட்லி கடை நல்லாவே கடையை போட்டு கல்லா கட்டியுள்ளது.

இன்பன் உதயநிதி ஹேப்பி: தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தை இன்பன் உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் வழங்கியிருந்தார். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, கீதா கைலாசம், இளவரசு, சமுத்திரகனி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த இட்லி கடை படம் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை என 2 விடுமுறை நாட்களிலும் சூப்பரான வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இன்பன் உதயநிதி பொறுப்பேற்ற முதல் படமே வசூலை அள்ளி வருவதால் ரொம்ப ஹேப்பியாக உள்ளார்.

காந்தாரா அலையிலும் குறையவில்லை: இட்லி கடை படம் முதல் நாள் ஓடும், காந்தாரா சாப்டர் 1 அலைக்கு முன்னால் 2வது நாள் எல்லாம் அவுட் ஆகிவிடும் என ஏகப்பட்ட மீம்களையும் ட்ரோல்களையும் தனுஷ் ஹேட்டர்கள் பரப்பினர். ஆனால், நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என்றும் கர்நாடகாவிற்கு காந்தாரா நல்ல படம் போல தமிழ்நாட்டுக்கு இட்லி கடை படம் தங்கமான படம் என ஊர் மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

இட்லி கடை 2 நாள் வசூல்: அக்டோபர் 1ம் தேதி வெளியான இட்லி கடை திரைப்படம் முதல் நாளில் 11 கோடி வரை இந்தியாவில் வசூல் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் 10.35 கோடி வசூல் ஈட்டிய அந்த படம் தெலுங்கில் 65 லட்சம் வரை ஈட்டியது. 2வது நாளில் பெரிய சரிவை சந்திக்கும் என்றும் காந்தாரா சாப்டர் 1 படத்துடன் மோதுகிறது என்றும் கூறப்பட்ட நிலையில், 2வது நாளிலும் 10 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை கிடைத்த தகவலின் படி இட்லி கடை அள்ளியிருப்பதாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது. 2 நாட்கள் சேர்த்து இட்லி கடை படம் 21 கோடி வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் முதல் நாளிலேயே 16 கோடி வசூல் ஈட்டிய இந்த படம் 2வது நாளில் 28 கோடி வரை வசூல் ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 கோடி அசால்ட்: முதல் வார முடிவிலேயே இட்லி கடை திரைப்படம் 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து இட்லி கடை இதே வேகத்தில் ஓடினால் அது சாத்தியம் என்கின்றனர். மாமன், தலைவன் தலைவி படங்களை போல சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இட்லி கடை கல்லா கட்டும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X