ஊசிப்போன இட்லி.. நித்யா மேனன் உடன் காதல் கிசுகிசு.. கடுப்பில் தனுஷ்.. மேனேஜர் ஸ்ரேயாஸ் சொதப்பிட்டாரா?

சென்னை: தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. ஒரு பக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றாலும் இன்னொரு பக்கம் இட்லி கடை இசை வெளியீட்டு விழா குறித்த சர்ச்சைகளும் சோஷியல் மீடியாவில் விவாத பொருளாக மாறி வருகிறது.

விழாவின் தொடக்கத்திலேயே தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் மேடையேறி "நல்லவனா இருங்க.. ரொம்ப நல்லவனா இருக்காதீங்க" என சீண்டி விடுவது போல பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜி.வி. பிரகாஷ் குமாரும் தனுஷை பின்னாடி இருந்து குத்தும் 4 பேர்களில் நான் ஒருவனாக இருக்க மாட்டேன் என்றார்.

Idly Kadai Audio Launch controversies and Nithya Menen love gossips upsets Dhanush
Photo Credit:

இதுபோதாது என்ற குறைக்கு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொடுத்த சாம்பார் இட்லி ஊசிப்போனது தான் பெரிய பஞ்சாயத்தாக மாறியது. இளைய சூப்பர் ஸ்டார் போஸ்டர், நித்யா மேனன் கிசுகிசு என இட்லி கடை மற்றும் தனுஷை சுற்றி ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஊசிப்போன இட்லி: தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் சாம்பார் இட்லியை ஸ்நாக்ஸ் ஆக ஏற்பாடு செய்தது நல்ல ஐடியாவாக இருந்தாலும், கால தாமதம் காரணமாக அந்த இட்லி ஊசி போய்விட்டதாக எழுந்த சர்ச்சை காரணமாக ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரச்சனை வெடித்தது. ஆனால், உடனடியாக அதற்கு மாற்றாக வேறு ஸ்நாக்ஸை கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரி செய்து விட்டனர். தனுஷின் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவை ஹைலைட் ஆக்கியதே அவருடைய மேனேஜர் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Idly Kadai Audio Launch controversies and Nithya Menen love gossips upsets Dhanush
Photo Credit:

நித்யா மேனன் உடன் காதல் கிசுகிசு: நடிகர் தனுஷ் உடன் ஹீரோயின்கள் சேராமல் இருக்க வேண்டும் என வெளிப்படையாகவே பார்த்திபன் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து மீண்டும் நித்யா மேனன் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ள நிலையில், நித்யா மேனன் மற்றும் தனுஷ் இடையே காதல் என்றும் சில கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் பரவத் தொடங்கிய நிலையில், தனுஷ் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்கின்றனர். ஏற்கனவே மிருணாள் தாகூருடன் கோர்த்து விட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

குபேரா நிலைமை ஆகிடக்கூடாது: தெலுங்கில் குபேரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் குபேரா படம் ஓடாததற்கு ஹேட்டர்கள் தான் காரணம் என்பதை புரிந்துக் கொண்டு தான் தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் அப்படியொரு பேச்சை பேசினார் என்கின்றனர். இட்லி கடை படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை ரிலீஸாக வெளியாகவுள்ள நிலையில், குபேரா படத்தை போல வசூலில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்றும் எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் படத்தை வெளியிட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் தனுஷ்.

நெகட்டிவிட்டியால் அழிகிறதா தமிழ் சினிமா?: சிவகார்த்திகேயன் vs தனுஷ் பிரச்சனை தான் தனுஷுக்கு எதிரான நெகட்டிவிட்டி என்பதை மறைமுகமாக சொல்லாமல் சொல்கின்றாரா? என்கிற கேள்வி சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளது. வளர்த்தவர்கள் எல்லாம் ஏறி மிதிப்பதாக ஸ்ரேயாஸ் பேசியதில் இருந்தே இது தெளிவாகிறது என்கின்றனர். நயன்தாரா vs தனுஷ் இடையேயான பிரச்சனையும் தனுஷின் படங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் அடிவாங்க காரணம் என்கின்றனர். ரஜினிகாந்த் vs விஜய், அஜித் vs விஜய் என ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் அடுத்த நடிகர் முன்னேறக் கூடாது என சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டியை பரப்பினால், தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கும் அது திருப்பி அடிக்கும் என்பதை எப்போது உணர்வார்கள் என்று தான் தெரியவில்லை என சினிமா வட்டாரத்தில் பலரும் புலம்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X