»   »  அரசியலுக்கு வரலாம்-ரஜினி

அரசியலுக்கு வரலாம்-ரஜினி

Subscribe to Oneindia Tamil
Rajini
சக்தே இந்தியாவில் ஷாருக் கான் நடித்தது போன்ற கேரக்டரில் நடிக்க ஆசைப்படுவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

என்டிடிவி, 2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளராக ரஜினியைத் தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ரஜினிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருதினை வழங்கினார்.

பின்னர் ரஜினியிடம் உங்களுக்குப் பிடித்த இந்தி நடிகர் யார் என்று என்டிடிவி நிருபர் சீனிவாசன் கேட்க, அமிதாப்பச்சன் என பளிச்சென பதிலளித்த ரஜினி, அமிதாப் இந்திய சினிமாவின் பேரரசர் என்றார்.

அப்போது, இங்கே ஷாருக் கானும் அமர்ந்திருக்கிறார்.. அவரைப் பிடிக்குமா என்று சீனிவாசன் கேட்க, ஐயோ.. ஷாருக்கை பிடிக்காமலா.. ஷாருக்கான் மிகச் சிறந்த நடிகர். விளையாட்டுக்களை புரமோட் செய்வது போன்ற கேரக்டர்களில் அவர் நடிப்பு சந்தோஷமாக இருக்கிறது.

குறிப்பாக ஹாக்கி பயிற்சியாளராக அவர் நடித்த சக்தே இந்தியா படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவருக்கு எனது பாராட்டுக்கள். அதேபோன்ற ரோலில் நடிக்க நானும் ஆசைப்படுகிறேன் என்றார் ரஜினி.

அப்போது எழுந்த ஷாருக்.. சார் உங்களை நேரில் பார்ப்பதே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. நானும் பேரரசனாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்க ரஜினி விழுந்து விழுந்து சிரிக்க மேடையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் சிரிப்பில் ஆழ்ந்தார்.

அடுத்து அரசியலுக்கு வருவீர்களா என்று ரஜினியிடம் சீனிவாசன் கேட்க, அது விதியின் கையில் இருக்கிறது. நான் கடவுளை நம்புபவன். நேற்று நான் பஸ் கண்டக்டராக இருந்தேன். இன்று நடிகன் என்ற பாத்திரத்தை கடவுள் தந்துள்ளார். நாளை எப்படி இருப்பேன், என்ன செய்வேன் என்பதை இப்போது என்னால் கூற முடியாது.

நான் அரசியலுக்கு வருவேனா என்பதையும் கடவுள்தான் நிர்ணயிக்க வேண்டும். கடவுள் சொல்வதை நான் செய்வேன் என்றார் ரஜினி.

நிகழ்ச்சியில் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார்.

எந்தவித ஒப்பனையும் இல்லாமல், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருவது போல தாடியுடன், படு இயல்பாக ரஜினி வந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பிரதமரைப் பார்த்து, இவர் அரசியல் முனிவர் என்று ரஜினி கூற அதை ஆமோதிப்பது போல சிரிப்புடன் தலையாட்டினார் மன்மோகன் சிங்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil