»   »  அப்படி இருந்த விஜய்யா இப்படி ஆகிவிட்டார்: வியப்பில் புலி படக்குழு

அப்படி இருந்த விஜய்யா இப்படி ஆகிவிட்டார்: வியப்பில் புலி படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படப்பிடிப்பில் விஜய்யை பார்ப்பவர்கள் அட நம்ம விஜய்யா இது என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறாராம்.

சிம்புதேவன் இயக்கி வரும் ஃபேன்டஸி படமான புலியில் விஜய் நடித்து வருகிறார். படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது. புலி படத்தின் இசை உரிமையை ஏற்கனவே சோனி நிறுவனம் வாங்கிவிட்டது.


இப்படி புலி படம் பற்றி அவ்வப்போது ஏதாவது செய்தி வந்து கொண்டிருக்கிறது.


விஜய்

விஜய்

விஜய் படங்களில் காமெடி செய்து கலகலப்பாக நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.


ஆச்சரியம்

ஆச்சரியம்

படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் ஆளே மாறிவிடுவார் என்று நடிகைகள் அவரைப் பற்றி தெரிவித்துள்ளனர்.


விஜய்யா?

விஜய்யா?

வழக்கமாக படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் விஜய் புலி படப்பிடிப்பு தளத்தில் மற்றும் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசுகிறாராம். இதை பார்க்கும் படக்குழுவினராலேயே இது விஜய் தானா என்று நம்ப முடியவில்லையாம்.


பேக்கப்

பேக்கப்

படப்பிடிப்பில் விஜய்யின் காட்சிகளை படமாக்கி முடித்து அவர் கிளம்பலாம் என்று கூறினாலும் மனிதர் அங்கேயே இருந்து அரட்டை அடிக்கிறாராம்.


கதை

கதை

புலி படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த மகிழ்ச்சியில் தான் மனிதர் கலகலப்பாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.


English summary
Puli team can't believe its own eyes as Vijay who usually keeps to himself in the set is very jovial now.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil