twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வான்கடே செல்ல விருப்பமில்லை... வீட்டிலேயே ஜாலியாக மேட்ச் பார்க்கிறேன்: ஷாரூக்

    |

    மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் அரங்கத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்து டிவியில் கிரிக்கெட் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார் நடிகர் ஷாரூக்கான்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரான இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது பிரச்சினையில் சிக்கினார். மும்பை வான்கடே கிரிக்கெட் அரங்கத்துக்குள் சென்றபோது, அவருக்கு காவலாளியுடன் தகராறு ஏற்பட்டது.

    இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வான்கடே கிரிக்கெட் அரங்கத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.

    இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹாரூக்கான், 'வீட்டில் இருந்து கிரிக்கெட் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது :-

    வான்கடே செல்ல விருப்பமில்லை...

    வான்கடே செல்ல விருப்பமில்லை...

    வான்கடே கிரிக்கெட் அரங்கத்தில் நுழைய எனக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்ததை தொடர்ந்து நான் அங்கு செல்லவில்லை. அங்கு செல்லவும் விரும்பவில்லை.

    ரொம்ப சந்தோஷம் பாஸ்...

    ரொம்ப சந்தோஷம் பாஸ்...

    நான் எனது வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கிறேன். இதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு காலம் வரும்....

    ஒரு காலம் வரும்....

    வான்கடே அரங்கத்துக்கு வந்து கிரிக்கெட் போட்டியை காணவருமாறு என்னை அழைக்கும் காலம் வரும். அதை நாம் பார்க்க தான் போகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆர்வம்...

    ஆர்வம்...

    அதேபோல், வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளைக் காண தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    என் குழந்தைகள்...

    என் குழந்தைகள்...

    மேலும், தனது அணியின் வீரர்கள் தனது குழந்தைகள் போன்றவர்கள். எனவே, வெற்றியோ, தோல்வியோ அவர்களை மாற்றும் எண்ணமில்லை என்கிறார் ஷாரூக்.

    English summary
    Shah Rukh Khan says he is happy watching matches at his home and staying away from the Wankhede Stadium in the wake of Mumbai Cricket Association's (MCA) five-year ban on the Kolkata Knight Riders owner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X