மீண்டும் மகேஷ் பாபு ரூட்டை பின்பற்றுகிறாரா விஜய்? ஹீரோயின் தேர்விலும் அது நடக்க வாய்ப்பிருக்கிறதாம்!

சென்னை: பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பாகவே தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி விட்டது.

தோழா, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி தான் தளபதி 66 படத்தை இயக்கப் போகிறார்.

இந்நிலையில், அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் மத்தியில் போட்டி நிலவுவதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.

மகேஷ் பாபு ரூட்

மகேஷ் பாபு ரூட்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த கில்லி, போக்கிரி படங்கள் எல்லாம் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவின் படங்களின் ரீமேக் தான் என்பது அனைவருக்கும் தெரியும். ரீமேக் கலாசாரத்தை சமீப காலமாக விஜய் விரும்பாத நிலையிலும், மகேஷ் பாபுவை வைத்து இயக்கி ஹிட் கொடுத்த தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் விஜய் இன்னும் மகேஷ் பாபுவின் ரூட்டை பின் பற்றுகிறார் என்றே கமெண்ட் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் ஹீரோயின்

பீஸ்ட் ஹீரோயின்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டதும் இதே காரணத்திற்காக இருக்கலாம் என்கிற பேச்சுக்களும் எழுந்துள்ளன. வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த மகரிஷி படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தான்.

தளபதி 66 ஹீரோயின் யார்

தளபதி 66 ஹீரோயின் யார்

தளபதி 66 படத்தின் இயக்குநர் வம்சி என்பது அதிகாரப்பூர்வமாக இயக்குநரே ட்வீட்டை போட்டு அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது யாரு? என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கோலிவுட் நடிகைகள் சிலர் இந்த படத்தில் நடிக்க அணுகினாலும் டோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகளுக்கே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Enna Vazhka da Album launch | Rakshan | Gp muthu | All Vijay Tv Celebrities | Filmibeat Tamil
சர்காரு வாரி பட்டா ஹீரோயின்

சர்காரு வாரி பட்டா ஹீரோயின்

பைரவா, சர்கார் என விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து கலக்கிய கீர்த்தி சுரேஷை பொங்கலுக்கு வெளியாக உள்ள மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படத்தில் ஹீரோயின் ஆக்கி உள்ளனர். மீண்டும் விஜய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை கீர்த்தி சுரேஷுக்கும் உள்ள நிலையில், இந்த படத்தில் அவர் நடிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இவனுக்கு சரியான ஆள் இல்லை

இவனுக்கு சரியான ஆள் இல்லை

மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான 'இவனுக்கு சரியான ஆள் இல்லை' (தமிழ் டப்பிங்) எனும் சரிலேரு நீக்கெவரு படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாவாரா? என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. ஏற்கனவே கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகாவும் சீக்கிரமே விஜய் படத்தில் நிச்சயம் நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ள நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பரத் எனும் நான் ஹீரோயின்

பரத் எனும் நான் ஹீரோயின்

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பரத் எனும் நான் திரைப்படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானியும் தளபதி 66 படத்தில் நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக கமீட் ஆகி உள்ள கியாரா அத்வானி அடுத்ததாக ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் ரீமேக்கிலும் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாவாரா என்பது சந்தேகம் தான். ஆனாலும், ஹீரோயின்கள் கெட்டப் மாற்ற தேவையில்லை என்பதால் ஒரே நேரத்தில் இரு பெரிய படங்களிலும் நடிக்கவும் முடியும் என்பதால் கியாரா அத்வானி பெயரும் தளபதி 66 ஹீரோயின் எதிர்பார்ப்பு பட்டியலில் உள்ளது.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

மகேஷ் பாபு ஹீரோயின்களை கடந்து வேறு சில ஹீரோயின்கள் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் பெயரும் பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி திஷா பதானி உள்ளிட்ட பெயர்களும் அடிபடுகின்றன. விரைவில் தளபதி 66 படத்தின் ஹீரோயின் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமன் இல்லையா

தமன் இல்லையா

ஹீரோயின் பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் இல்லை என்றும் தேவிஸ்ரீ பிரசாத் என்றும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. தளபதி ரசிகர்கள் மாஸ்டர், பீஸ்ட்டை தொடர்ந்து தளபதி 66க்கும் அனிருத்தையே ஆன் போர்ட் பண்ணுங்க என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். உலகத் தர டெக்னிஷீயன்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆயுத பூஜை அன்று தெரியவரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X