»   »  சின்னக்கலைவாணர் இனி டாக்டர் விவேக்…

சின்னக்கலைவாணர் இனி டாக்டர் விவேக்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விவேக் செய்த சமூக சேவையை பாராட்டி சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படும் பெருமையுடையவர் விவேக். இவருடைய நகைச்சுவைகள் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும்.

நகைச்சுவையோடு கலந்த பல சமூக கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நகைச்சுவை கலைஞனாக தமிழ் சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகிறார்.

பத்மஸ்ரீ விருது

பத்மஸ்ரீ விருது

தமிழ் திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. விவேக் நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டவர்.

மரக்கன்றுகள் நடும் திட்டம்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

தற்போது தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கையிலெடுத்து முன்னின்று நடத்தி வருகிறார்.

சமூக சேவைக்கு விருது

சமூக சேவைக்கு விருது

இவரது சமூக சேவையைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்' பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழா இன்று சென்னைக்கு அருகில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஷங்கர், நடிகர் விஜய்

ஷங்கர், நடிகர் விஜய்

ஏற்கெனவே, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் இயக்குனர் ஷங்கர், மற்றும் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. சத்யாபாமா பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பாராட்டு

டாக்டர் பட்டம் பெற்றுள்ள விவேக்கிற்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

English summary
Comedian and character artist Vivek is a happy man. It’s just not because his next film Vai Raja Vai is hitting the screen this week. He is doubly happy because he will be honored with a doctorate by Sathyabama University, Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil