»   »  ஜாக்கி “சான்” உடன் இணையும் அமீர் “கான்”

ஜாக்கி “சான்” உடன் இணையும் அமீர் “கான்”

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி திரை உலகின் முன்னணி முடிசூடா நடிகர் அமீர்கான் பிரபல நடிகரும் அதிரடி ஆக்சன் மன்னனுமான ஜாக்கி சானுடன் இணைந்து இந்திய- சீன கூட்டுத் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் அவரது பிகே படமும் அங்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தான் இந்தியாவும், சீனாவும் இணைந்து தயாரிக்கப் போகும் படத்தில் ஜாக்கியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Jackie - Aamir to star in a Indo- China joint movie

இந்தியாவும், சீனாவும் இணைந்து 3 படங்களைத் தயாரிக்கவுள்ளன. இதில் குங்பூ யோகா என்ற படத்தில் ஆமிரும், ஜாக்கியும் இணைந்து நடிக்கப் போகிறார்களாம்.

குங்பூயோகா திரைப்படம் சீன தற்காப்புக் கலையுடன் இந்திய கலாச்சாரத்தை இணைத்து எடுக்கப்படவுள்ளது.

இன்னொரு படம் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்ரீகர் யுவான் சுவாங் குறித்த படமாகும்.

மூன்றாவது படமான டா நோ தயான் ஷூ இந்தியாவில் அழிவை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அழிப்பது போல படம் பிடிக்கப்பட உள்ளது.

போற போக்கப் பாத்தா சண்டைக்கார சீனாக்காரன் நமக்கு சம்பந்தி ஆயிடுவான் போல..!

English summary
Jackie Chan and Aamir Khan to star in a China-India co-production chinese film regulators said on Thursday while announcing three such films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil