»   »  கவுதம் மேனனின் துருவ நட்சத்திரமாக மாறிய ஜெயம் ரவி

கவுதம் மேனனின் துருவ நட்சத்திரமாக மாறிய ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவியை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.

காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற மாபெரும் ஹிட்களைத் தொடர்ந்து 3 வது முறையாக சூர்யா - கவுதம் மேனன் இணையும் புதிய படத்திற்கு துருவ நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டது.

துருவ நட்சத்திரம் பூஜை போட்டு முடிந்த பின்னர் இந்தப் படத்தின் கதையை தன்னிடம் முழுமையாக கவுதம் மேனன் கூறவில்லை என்று கூறி இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டார்.

Jayam Ravi in Gautham Menon's Dhruva Natchathiram?

இந்நிலையில் மிருதன் படத்தைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்தின் கதையை கேட்டு ஜெயம் ரவி ஒப்புக் கொண்டதால் இப்படத்தை மீண்டும் தூசு தட்டும் முயற்சிகளில் தற்போது கவுதம் மேனன் இறங்கி இருக்கிறார்.

தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து திரையுலகில் ஜெயம் ரவியின் மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஜெயம் ரவியை வைத்து படமெடுக்க விநியோகஸ்தர்களும், பைனான்சியர்களும் முன்னுரிமை தரக் காத்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி துருவ நட்சத்திரம் படத்தை ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மூலமாக எடுக்க கவுதம் மேனன் முடிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று தகவல்கள் கசிந்திருக்கின்றன.

முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
After Achcham Enbadhu Madamaiyada Gautham Menon Team Up with Jayam Ravi. Sources Said Harris Jayaraj will join Gautham Menon for This Movie, Title Called as Dhruva Natchathiram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil