அனிமல் ரன்பீர் கபூர் எல்லாம் ஓரம்போங்க.. ஜித்தன் ரமேஷின் டெரர் லுக்.. டைட்டிலே ஏடாகூடமா இருக்கே!
சென்னை: நடிகர் ஜீவா ஒரு பக்கம் "படிச்சு படிச்சு சொன்னேனடா" என "தலைவர் தம்பி தலைமையில்" படத்தில் சரவெடி காமெடி செய்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவருடைய அண்ணன் ஜித்தன் ரமேஷ் நானும் கம்பேக் கொடுக்கிறேன் என ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரிக்கு ரமேஷ் மற்றும் ஜீவா என இரு மகன்கள் உள்ளனர். ஜீவா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஆசை ஆசையாய் படத்தின் மூலம் 2003ம் ஆண்டு ஹீரோவானார்.

அதற்கு முன்பாகவே பெரும்புள்ளி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
ஜித்தன் படத்தில் அறிமுகம்: தம்பி ஹீரோவாக அறிமுகம் ஆன நிலையில், தானும் ஹீரோவாக வேண்டும் என நினைத்த ரமேஷ் 2004ம் ஆண்டு வித்யார்த்தி எனும் தெலுங்கு படத்தில் நடித்தார். ஆனால், 2005ம் ஆண்டு தமிழில் அவர் நடித்து வெளியான ஜித்தன் படம் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்து இன்றளவும் அவரை ரசிகர்கள் ஜித்தன் ரமேஷ் என்று கொண்டாட காரணமாக உள்ளது.
ஜீவா அளவுக்கு வரல: ஆனால், அந்த படத்துக்குப் பிறகு மது, ஜெர்ரி, நீ வேணும்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் ஜீவா அளவுக்கு வெற்றிப் படங்களை ஜித்தன் ரமேஷால் கொடுக்க முடியவில்லை. சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் துணை நடிகராக மாறினார். 2016ல் ஜித்தன் 2 படத்தை முயற்சித்து அதிலும் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வந்து 4வது சீசனை கலகலப்பாக்கினார்.
ஹிடன் கேமரா: இந்நிலையில், மீண்டும் ஹீரோவாகும் முடிவுடன் ஜித்தன் ரமேஷ் 'ஹிடன் கேமரா' எனும் படத்தில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் அனிமல் படத்தில் நடித்ததை போன்ற லுக்கில் உடல் எடையை எல்லாம் கணிசமாக குறைத்து ஜித்தன் ரமேஷ் டெரர் போஸ் கொடுத்துள்ள ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அருண்ராஜ் பூத்தணூல் என்பவர் இந்த படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஷாமூன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிருஷ்ணா தவா நடிக்கிறார். அப்புகுட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜித்தன் ரமேஷுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











