ஜூனியர் என்டிஆரை இந்தியன் 2 தாத்தா ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களே.. வார் 2வை வறுக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் நடித்த கூலி படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு லோகேஷ் கனகராஜை ரோஸ்ட் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் டோலிவுட் ரசிகர்கள் நல்லா இருந்த ஜூனியர் என்டிஆரை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்று என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க என பங்கம் பண்ணி வருகின்றனர்.

சினிமா விமர்சகர்களை விட சோஷியல் மீடியாவில் உள்ள ரசிகர்கள் பெரிய விமர்சகர்களாக மாறி வருவது தான் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகின்றன. அந்த காலத்தில் எல்லாம் நடிகர்களின் நடிப்பு பிடித்து இருந்தாலே போதும் படத்தின் கதை பற்றியோ? காட்சிகள் பற்றியோ? குறிப்பாக லாஜிக் பற்றியோ எந்தவொரு கவலையும் இல்லாமல் படத்தை பார்த்து ரசிகர் மன்றங்களை வைத்து ஓட்டுப் போட்டு முதல்வராக கூட மாற்றியிருந்தனர்.

Jr NTR sixpack scenes from War 2 turns huge troll material
Photo Credit:

ஆனால், இன்றைக்கு இருக்கும் ரசிகர்களையே கணிக்க முடியாத சூழல் தான் உருவாகி வருகிறது. மத கஜ ராஜா படத்தை கொண்டாடிவிட்டு கூலி டிரைலரை பார்த்து ஏகப்பட்ட டீகோட் செய்து முதல் நாள் டிக்கெட் புக் செய்ய இரவு பகல் தூங்காமல் புக் மை ஷோ சர்வரை கிராஷ் செய்து விட்டு படம் வெளியான பின்னர் பாடம் எடுத்து வருகின்றனர்.

லோகேஷை பொளக்கும் எக்ஸ் மேன்கள்: ட்விட்டர் குருவிகளாக இருந்த பலரும் தற்போது எக்ஸ்மேன்களாக மாறி லோகேஷ் கனகராஜை பொளந்துக் கட்டி வருகின்றனர். பிரில்லியண்ட் இயக்குநர் என்றெல்லாம் அனிருத் பேசிய நிலையில், படத்தில் எங்கேயும் அதை பார்க்கவே முடியவில்லையே என்று வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், Grok-இடமெல்லாம் கூலி படத்தின் கதையை கேட்டு அலப்பறை கிளப்பி வருகின்றனர்.

வார் 2வையும் விடல: அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி நடித்த வார் 2 படத்தையும் விடாமல் ரோஸ்ட் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜூனியர் என்டிஆர் சட்டையை கழட்டி சிக்ஸ்பேக் காட்டும் காட்சியை வைத்து இந்தியன் தாத்தா சிக்ஸ் பேக் வைத்த காட்சியுடன் ஒப்பிட்டும் ராஜமெளலி டோலிவுட்டில் கெத்தாக காட்டிய நடிகர்களை பாலிவுட் இயக்குநர்கள் இப்படி காமெடி பீஸாக மாற்றி வருகிறார்களே என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

வசூல் சாதனை: கூலி மற்றும் வார் 2 என இரண்டு படங்களையும் சோஷியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தாலும், இன்னொரு பக்கம் பெரிய வீக்கெண்ட் என்பதால் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி இரண்டு படங்களையும் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என பார்த்து வருகின்றனர். இந்தியளவில் கூலி மற்றும் வார் 2 என 2 படங்களும் 2 நாட்களில் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த 2 படங்களும் எதிர்பார்த்த வசூலை அள்ளிவிடும் என்கின்றனர். தியேட்டர் ஓனர்களுக்கு பார்க்கிங், பாப்கார்ன் கலெக்‌ஷனே பல மாதங்களுக்குப் பிறகு பக்காவாக வந்திருக்கும் என்கின்றனர். பெரிய நடிகர்களின் படங்கள் வரும்போதெல்லாம் டிக்கெட் பிரஷர் இருப்பதும், அதன் பின்னர், ட்ரோல் மற்றும் மீம்கள் குவிவதும் இந்திய சினிமாவில் வாடிக்கையாக மாறிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X