»   »  பொங்கலுக்கு தசாவதாரம் 'ஷ்யூர்'!

பொங்கலுக்கு தசாவதாரம் 'ஷ்யூர்'!

Subscribe to Oneindia Tamil


பொங்கல் பண்டிகைக்கு தசாவதாரம் நிச்சயம் வெளியாகும் என கலைஞானி கமல்ஹாசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Click here for more images

சென்னையில் பழம்பெரும் மலையாள திரையுலக கேமராமேன் மகத ரவி வர்மாவுக்கு கேரள அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், கேரள அரசின் ஜே.சி. டேணியல் வாழ்நாள் சாதனை விருது, 81 வயதாகும் மகத ரவி வர்மாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. அடூர் கோபாலகிருஷ்ணனின் ஆஸ்தான கேமராமேனாக விளங்கியவர் ரவி வர்மா.

கேரள கலாச்சார அமைச்சர் எம்.ஏ.பேபி இந்த விருதினை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள வர்மாவின் வீட்டில் நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சில நிமிடங்கள் பேசினார் கமல். அப்போது, தசாவதாரம் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முழுவதும் முடிந்து விட்டது. சில நகாசு வேலைகள்தான் பாக்கி உள்ளது.

அனைத்துப் பாடல்களையும் படமாக்கி விட்டோம். கிளைமாக்ஸ் காட்சி சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது.

படப்பிடிப்புக்குப் பிந்தைய தயாரிப்புப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கண்டிப்பாக தசாவதாரம் வெளியாகும் என்று உறுதியாக கூறுகிறேன்.

படம் வெளிவருவதில் மேலும் தாமதமாகாது என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றார்.

Read more about: kamal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil