»   »  சூர்யாவுக்கு நான் அண்ணன்.. சித்தப்பா... இரட்டை ரோல்!- கமல் பேச்சு

சூர்யாவுக்கு நான் அண்ணன்.. சித்தப்பா... இரட்டை ரோல்!- கமல் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவுக்கு நான் அண்ணனாகவும் இருக்கிறேன், சித்தப்பாவாகவும் இருக்கிறேன். இந்த மாதிரி இரட்டை வேடமேற்பது எனக்குப் பிடிக்கும் என்று கமல் ஹாஸன் கூறினார்.

ராஜாராணி' என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் படம் 'குக்கூ'.

இப்படத்தில் 'அட்டக்கத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜுமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பார்வையற்ற இருவரின் காதலை மையப்படுத்தி வரும் படம் இது. நாயகன், நாயகி இருவருமே பார்வையற்றவர்களாக நடித்துள்ளனர். குக்கூ இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

கமல் - சூர்யா

கமல் - சூர்யா

இதில், நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, சேரன் அட்லி, பா.ரஞ்சித், கார்த்திக் சுபாராஜ், நவீன், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஆடியோ சிடியை கமல் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார்.

வித்தியாசத்துக்கு காரணம் கமல்

வித்தியாசத்துக்கு காரணம் கமல்

இவ்விழாவில் சூர்யா பேசும்போது, "குக்கூ' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். கமல் எனக்கு அண்ணன். நான் வித்தியாசமான படங்களைப் பண்ண காரணம் கமல் சார்தான். நான் என்ன பண்ணுகிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்," என்றார்.

அண்ணன்

அண்ணன்

கமல் ஹாஸன் பேசுகையில், "சூர்யா என்னை அண்ணன் என்று சொன்னார். அவரை நான் கவனித்து வருகிறேன் என்றும் சொன்னார். அது எல்லாமே உண்மைதான். ஆனால், சூர்யா தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவருக்கு நான் அண்ணன்.

சித்தப்பா

சித்தப்பா

அவருடைய அப்பா சிவகுமாருடன் அவர் இருக்கும்போது நான் அவருக்கு சித்தப்பாவாகத்தான் இருப்பேன்.

இரட்டை வேடங்கள் பிடிக்கும்

இரட்டை வேடங்கள் பிடிக்கும்

பொதுவாக எனக்கு இரட்டை வேடங்களில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். சூர்யா விஷயத்தில் நான் இரண்டு வேடங்களில் இருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி. குக்கூ படம் வித்தியாசமான முயற்சியாகத் தெரிகிறது. இந்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்," என்றார்.

English summary
Kamal Hassan says that he is big brother and uncle for actor Surya and he likes to continue in these duel roles in Surya case.
Please Wait while comments are loading...