»   »  திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை- கமல்ஹாசன்

திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை- கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படம் எடுப்பதில் எனக்கு முழுமையான சுதந்திரம் இதுவரை இந்தியாவில் கிடைக்கவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் சமீபத்தில் பிரபலமான ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவரது திரைப்படங்கள் குறித்து கேள்விகள் எழுந்தது.

Kamal Haasan Talks About Freedom

திரைப்படம் பற்றி கமல் கூறும்போது "உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஒரு இந்திய திரைப்பட படைப்பாளிக்கும் முழுமையான பேச்சு சுதந்திரம் இல்லை.

இதுதான் யதார்த்த உண்மை.எனக்கும் படம் எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. இதை ஒரு புகாராகவே நான் வைக்கிறேன்.படமெடுப்பதில் நான் இன்னும் முழு சுதந்திரத்தை பெறவில்லை.

சுதந்திரம் என்பது மாறாதது மற்றும் நிலையானது. சுதந்திரம் வரம்புடன் இருக்க வேண்டும். என்றாலும் அது நமது உடல் போன்றது. அதை நாம்தான் ஊட்டி வளர்த்து காப்பாற்ற வேண்டும்.

மேலும் நமது சுதந்திரம் நமக்கு அவசியமானது. அது நமக்கு வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெருவாரியான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

English summary
Kamal Haasan says in Recent Interview "I have Complete Freedom in Making Movies, that are not Available in India".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil