»   »  ஜவுளிக்கடை விளம்பரப்படத்தில் நடிக்கும் கமல்…

ஜவுளிக்கடை விளம்பரப்படத்தில் நடிக்கும் கமல்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் வெற்றிகரமான நடிகராக நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் முதன் முறையாக வர்த்தக விளம்பரப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளதாம்.

இன்றைக்கு விளம்பர படங்களில் நடிக்காத நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ இல்லை எனலாம். ரஜினி, கமல் ஆகியோர் அதற்கு விதிவிலக்கு. அஜீத், விஜய் கூட சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் விளம்பரங்களில் தலைகாட்டுவது வாடிக்கை. இப்படி விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்.

நடிக்க மறுத்த கமல்

நடிக்க மறுத்த கமல்

கமல் விளம்பரத்தில் நடிக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே செய்திகள் வெளியானது. ஆனால் விளம்பர நிறுவனங்கள் கேட்டும் கமல் மறுத்து விட்டாராம். வர்த்தக விளம்பரங்களில் நடிப்பதை

தவிர்த்து வந்த கமல் மாறாக விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

ஜவுளிக்கடை விளம்பரம்

ஜவுளிக்கடை விளம்பரம்

இந்நிலையில், முதன்முறையாக ஜவுளிக் கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் கமல். இதற்கான படப்பிடிப்பு வரும் வாரம் நடைபெற இருக்கிறது.

கிருஷ்ணா இயக்கத்தில்

கிருஷ்ணா இயக்கத்தில்

இந்த விளம்பரப் படத்தை கிருஷ்ணா இயக்கவிருக்கிறார். ஃபைவ் ஸ்டார், ஆட்டோகிராப், அறிந்தும் அறியாமலும் உள்பட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கிருஷ்ணாதான் முதன் முறையாக கமல் நடிக்கும் விளம்பரப்படங்களில் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ரசிகர்கள்

கமல் ரசிகர்கள்

தமிழ் சினிமா உலகின் பல நடிகர்கள் தற்போது வேஷ்டி, பனியன் விளம்பரங்களில் நடிக்கின்றனர். நடிகர் சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் ஜவுளிக்கடை விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.

நடிகர் கமல் இனி ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் இனி விளம்பரங்களிலும் கமல்ஹாசனை காணலாம்.

English summary
Kamal Hassan fans can see him in commercials now. The actor has finally decided to act advertisement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil