»   »  தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே... எப்பிழை செய்தேன் நான்?- கமல் ஹாஸன்

தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே... எப்பிழை செய்தேன் நான்?- கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாணவர்களின் போராட்டத்துக்கு துணை நின்ற தன்னை அரசியலுக்கு வரச் சொல்லலாமா.. என்ன பிழை செய்தேன் நான்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமீபத்தில் நடந்த மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் தாமாக முன்வந்து ஆதரவு அளித்தார். போராட்டம் நடந்த போது, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமான பதிவுகளை தனது சுட்டுரையில் பதிவிட்டு வந்தார்.

Kamal Hassan questions student protestors

போராட்டம் முடிவடைந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். போலீஸ் தடியடியை ஓரளவுக்கு கண்டிக்கவும் செய்தார். இதைத் தொடர்ந்து அவரை சமூக வலைதளங்கள் வாயிலாக பலர் அரசியலுக்கு வரச் சொல்வது போன்ற பதிவுகள் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், ""கேள்... தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச் சொல்வாய்?. எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா..." என்று தெரிவித்துள்ளார்.

ஆமா... அரசியல் அவ்ளோ பெரிய்ய தப்பா கமல் சார்?

English summary
Actor Kamal Hassan questioned student protestors why they pulling him to politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil