»   »  கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!

கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் மீதான விமர்சனத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம் கமல்ஹாஸன் அரசு மீதான கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.

Kamal issue: Vishal's comment on CM

அதற்கு பதிலளித்த முதல்வர், "கமல் ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். கமல் ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம்," என்றார்.

இந்த நிலையில் நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுகுறித்து செய்தியார்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், அவர்களது விவரங்களை 2 வாரத்தில் அறிவிப்போம்.

கமல்ஹாசன் மீதான விமர்சனத்தை முதலமைச்சர் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு, நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்," என்றார்.

நேற்று முன்தினம்தான் முதல்வர் பழனிச்சாமியை விஷால் மற்றும் திரையுலகினர் நேரில் சந்தித்து நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Producers Council President Vishal says that CM Palanisamy could have avoid his comment on Kamal Hassan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil