»   »  செவாலியே கமலுக்கு இன்னொரு 'குட்டி செவாலியே' வழங்கலாம்: பார்த்திபன்

செவாலியே கமலுக்கு இன்னொரு 'குட்டி செவாலியே' வழங்கலாம்: பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செவாலியே விருது பெறும் உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு கமல் ஹாஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறப்பு விழா நடத்தி கமலுக்கு விருது வழங்கப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கமலுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

Kamal should be given another Kutty Chevalier: Parthiepan

கமலுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியர் கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியரை வழங்கலாம்.

அவர் பேசும்போது கே. பாலச்சந்தர் சார் "அவன் எட்டாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. ஆனா அவனுடைய ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ள எனக்கே ஒரு டிக்சனரி தேவைபடுது" என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது. கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை கமல்ஹாசன் அவர்கள்! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுணர்வையும் கூட்டிக் கொடுக்கின்றன! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Director Parthiepan said that Chevalier Kamal Haasan should be given another kutty chevalier for the way he thanked people in English.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil