»   »  என்னைப் பொறுத்தவரை நடிகை கரீனா எல்லாம் ஒரு ஸ்டாரே இல்லை: சல்மான் கான்

என்னைப் பொறுத்தவரை நடிகை கரீனா எல்லாம் ஒரு ஸ்டாரே இல்லை: சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னை பொறுத்தவரை நடிகை கரீனா கபூர் ஒரு ஸ்டார் கிடையாது என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை கரீனா கபூர் சேர்ந்து பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கியுள்ள இந்த படம் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸ் ஆகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸாகி ஹிட்டான பிற படங்களை போன்று இதுவும் ஹிட்டாகிவிடும் என்று பாலிவுட் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் சல்மான் கான் கரீனா கபூர் மற்றும் திருமணம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

கரீனா

கரீனா

என்னை பொறுத்த வரை கரீனா கபூர் ஒரு ஸ்டாரே கிடையாது. அதே போன்று அவருக்கும் நான் ஸ்டார் கிடையாது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.

சல்மான்

சல்மான்

கரீனா என் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். நான் அவருக்கு அது போன்று தான். அவர் என் கண் முன்பு வளர்ந்தவர். அதனால் அவருடன் பணியாற்றும்போது ஒரு ஸ்டாருடன் இருப்பது போன்றே இருக்காது என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

சல்மானுக்கு 50 வயதாகப் போகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். அவர் வாழ்வில் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். இந்நிலையில் பெரியோர்கள் பார்த்து நடத்தும் திருமணத்திற்கு தான் தயார் என்று கூறியுள்ளார் சல்மான்.

குழந்தை

குழந்தை

திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளது என்று கூறி வந்த சல்மான் தற்போது தான் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளார்.

English summary
Salman Khan told that actress Kareena Kapoor is not a star for him as she is part of his family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil