யாருனு அடையாளம் தெரியுதா? 45 வது பிறந்த நாளை கொண்டாடிய.. விக்ரம் பட நடிகை!

சென்னை: ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அழகிய நாயகியாக விளங்கிய அனிதா ஹசனந்தனி ரெட்டி, இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறார். 'வருஷமெல்லாம் வசந்தம்', 'சாமுராய்', 'சுக்கிரன்' போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பாலும், கவர்ச்சியான திரை தோற்றத்தாலும் ரசிகர்களை ஈர்த்தவர் இவர் தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

மும்பையில் பிறந்த அனிதா ஹசனந்தனி ரெட்டி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துப் பெயர் பெற்றவர். தனது 18வது வயதில் ஹிந்தியில் வெளியான 'தாள்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விக்ரம் நடித்த 'சாமுராய்' படத்தில் நடித்தது இவரின் கரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர் 'சுக்கிரன்', 'நாயகன்', 'மகாராஜா' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

anita hassanandani Birthday
Photo Credit:

அனிதா ஹசனந்தனி ரெட்டி: ஆனால் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல், படிப்படியாக திரை உலகிலிருந்து விலகினார். 2015ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'ஹீரோ' திரைப்படமே இவரின் கடைசி திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

யாருனு அடையாளம் தெரியுதா: இந்நிலையில், அனிதா ஹசனந்தனி ரெட்டி, தனது 45வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக நீச்சல் உடையில் எடுத்துள்ள அவரது சமீபத்திய போட்டோஷூட், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. "வயது வெறும் எண்ணிக்கை தான்" என்பதற்கு உயிர்ப்பூட்டும் வகையில், இன்றும் அதே இளமையும், அழகும் குறையாமல் திகழும் அனிதா, மீண்டும் திரைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

https://www.instagram.com/reel/DXGha0AtlTI/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X