அண்ணன் அண்ணன் தான்.. தம்பி தம்பி தான்.. விஜய், அஜித், ரஜினின்னு யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிய எஸ்கே!
சென்னை: மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கு கொஞ்சம் கூட தலைக்கனம் ஏறவே இல்லை என்பதை 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் படமான அமரன் படத்தைக் கொடுத்த பின்னரும் அதே பழைய விஜய் டிவி காம்பேரிங் சிவாவாகவே பேசியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ளது.
குட்டித் தளபதி, திடீர் தளபதின்னுலாம் சொல்றாங்க.. "அண்ணன் அண்ணன் தான்.. தம்பி தம்பி தான்" என சிவகார்த்திகேயன் விஜய்யிடம் இருந்து துப்பாக்கி வாங்கிய சீன் குறித்து பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது.

அதுமட்டுமின்றி அஜித் குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என தனக்கு முன்னாள் திரைத்துறையில் சாதித்த அத்தனை பேருக்கும் தான் அன்பானவனாகவே இருக்கிறேன் என்றும் அவர்களிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் பேசி ஒட்டுமொத்த நடிகர்களின் ரசிகர்களையும் கவரும் விதத்தில் சூப்பராக பேசியுள்ளார் மதராஸி சிவகார்த்திகேயன்.
மதராஸி இசை வெளியீட்டு விழா: சமீபத்தில் சென்னை நாள், மெட்ராஸ் டே வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் படம் கடந்த ஆண்டு வெளியான அதே நாளில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படம் வெளியாகவுள்ளது சரியான பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். படத்தின் டிரைலரில் துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜம்வால் உடன் தெறி ஆக்ஷன் காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளது மிரட்டலாக உள்ளது. நேற்று மாலை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் என்னவெல்லாம் பேசினார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
குட்டித் தளபதி, திடீர் தளபதி: கோட் படத்தில் விஜய் சார் எனக்கு துப்பாக்கியை கொடுத்த காட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், அதே சமயம் அதை வைத்து ஏகப்பட்ட விவாதங்களும், ட்ரோல்களும் குவிகின்றன. அடுத்த தளபதியாக இவர் பார்க்கிறார் என்றும் அந்த தளபதி, இந்த தளபதி குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லா விமர்சிக்கின்றனர். நான் அப்படியெல்லாம் பண்ற ஆளா இருந்தா முதல்ல விஜய் சார் எனக்கு துப்பாக்கியை கொடுத்திருக்கவும் மாட்டாரு, நான் அதை வாங்கியிருக்கவும் மாட்டேன். என்னைக்குமே அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான்.. நான் அதை ஒரு நல்ல அனுபவமாக மட்டுமே பார்க்கிறேன் என்றார்.

அஜித் முதல் தனுஷ் வரை: விஜய் பெயரை மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டால், மற்ற நடிகர்களின் ரசிகர்களை எப்படி கவர முடியும் என நினைத்தாரோ தெரியவில்லை. விஜய் சார் கடைசி படம் ஜன நாயகன்னு சொல்லிட்டு, அரசியலுக்குப் போறேஎன் சொன்ன பிறகும் அவரது ரசிகர்கள் திடீரென அரசியல் தொண்டர்களாக மாறி அவருடன் செல்கின்றனர். அந்த பக்கம் அஜித் சார் கார் ரேஸுக்கு போனாலும் அவருக்கு அவ்ளோ கூட்டம் வருது. ரசிகர் மன்றமே தேவையில்லை என அவர் அதை கலைத்து பல வருடங்கள் ஆகியும் அவருக்கு அப்படியொரு கூட்டம் இன்னமும் உசுரா இருக்காங்க. எல்லாத் திறமைகளும் உல்ல உலக நாயகன் கமல் சார் வெற்றி கொடுத்தாலும் சரி தோல்வி கொடுத்தாலும் அவர் பக்கம் உண்மையா நிக்கிற ரசிகர்கள் உள்ளனர். 50 வருஷமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெத்தா இருக்க காரணமே அவரது ரசிகர் படை தான்.
சூர்யா சாருக்கும், விக்ரம் சாருக்கும் சிம்பு சாருக்கும், தனுஷ் சாருக்கும் என அனைவரும் ஏகப்பட்ட ரசிகர்களை தங்களது உழைப்பால் சம்பாதித்து வைத்துள்ளனர். நானும் கொஞ்சம் பேரை சம்பாதித்து வைத்திருக்கிறேன் என பேசியதும் எஸ்கே ரசிகர்கள் கைதட்டி அரங்கத்தை அதிர வைத்து விட்டனர். அமரன் படத்தைத் தொடர்ந்து மதராஸி படமும் சிவகார்த்திகேயனுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுக்கும் என்பதை தாண்டி தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல படமாக வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











