»   »  தமிழ் நன்கு தெரியும்.. தமிழில் நடிப்பேன்!- "மண்ணின் மைந்தர்"களுக்கு ஷாக் தரும் மகேஷ்பாபு

தமிழ் நன்கு தெரியும்.. தமிழில் நடிப்பேன்!- "மண்ணின் மைந்தர்"களுக்கு ஷாக் தரும் மகேஷ்பாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த எனக்கு தமிழ் மிக நன்றாகத் தெரியும். இனி தமிழ்ப் படங்களிலும் நடிப்பேன், என்று தமிழ் முன்னணி நடிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் மகேஷ்பாபு.

தெலுங்கில் முதல் நிலை நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் வாரிசு.

Mahesh Babu decides to act in direct Tamil films

இவருக்கு தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் கணிசமான ரசிகர்கள் உண்டு. இவரது நேரடி தெலுங்குப் படங்கள் கூட சென்னையில் ஏக வசூலை அள்ளுகின்றன.

இப்போது நேரடியாக தமிழில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். அப்படி வெளியாகும் முதல் படம் செல்வந்தன்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் மகேஷ் பாபு கூறுகையில், "நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். தமிழில் நன்றாக பேசுவேன். தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்ததால் அங்கு ஹீரோ ஆனேன்.

தமிழில் நடிக்க வேண்டும் என்பதும் எனது நீண்ட நால் ஆசை. தெலுங்கில் நான் நடித்துள்ள படம் ‘ஸ்ரீமந்த்துடு' இதற்கு ‘பணக்காரன்' என்பது பொருள். எனவே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படத்துக்கு ‘செல்வந்தன்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இது கிராம சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ள படம். தற்போது நான் 'பிரமோற்சவம்' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். அடுத்து தொடர்ந்து தமிழில் நடிப்பேன். தெலுங்கில் நான் நடிக்கும் போது தமிழிலும் அதே படத்தை நேரடி தமிழ்ப் படமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

English summary
Actor Mahesh Babu says that he would act in direct Tamil films here after. His first Tamil - Telugu bilingual Selvanthan will be released soon in Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil