»   »  பிரம்மோற்சவம்... மகேஷ் பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம்!

பிரம்மோற்சவம்... மகேஷ் பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கின் முதல் நிலை நாயகனான மகேஷ் பாபு முதல் முதலாக ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்துக்கு பிரம்மோற்சவம் என தலைப்பிட்டுள்ளன. பிவிபி சினிமா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

பிவிபி சினிமா தற்போது கார்த்தி-நாகர்ஜூனா நடிக்கும் புதிய படம், ஆர்யா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி', ‘பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது.

மகேஷ்பாபுவின் பிரமோற்சவம்

மகேஷ்பாபுவின் பிரமோற்சவம்

இந்நிலையில், பிரம்மோற்சவம் என்ற புதிய படத்தையும் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கிறது. இப்படத்தில் தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். மகேஷ்பாபு முதன்முறையாக நேரடியாக நடிக்கும் தமிழ் படம் இது.

தமிழிலும் ரசிகர்கள்

தமிழிலும் ரசிகர்கள்

மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகும் மகேஷ்பாபுவின் தெலுங்குப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாலும், அவருக்கென இங்கே தனி ரசிகர் கூட்டம் இருப்பதாலும் இந்த நேரடிப் பட முயற்சியில் இறங்கியுள்ளது பிவிபி.

ப்ரணிதா

ப்ரணிதா

இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங், ப்ரணிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறர்ர். இப்படத்தை ஸ்ரீகாந்த் அதலா என்பவர் இயக்குகிறார். மிக்கி மேயர் இசையமைக்கிறார். பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

குடும்ப உறவு

குடும்ப உறவு

குடும்ப உறவுகளின் மகிமையையும், உன்னதங்களையும் சொல்வதோடு, குடும்ப உறவுகளை எப்படி கொண்டாட வேண்டும், தலைமுறைகளை தாண்டி நம் பாரம்பரியத்தை எப்படி போற்றிக் காப்பது என்ற கதையை இனிய இசையுடன் சொல்லப் போகிறார்களாம்.

English summary
Mahesh Babu is making his debut in Tamil through PVP cinemas Brammothsavam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil