»   »  மாளவிகா மீண்டும் ஹீரோயின்

மாளவிகா மீண்டும் ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழில் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் மாளவிகா. ஆனால், யாருக்கு ஜோடி என்றுதெரிந்தால் மாளவிகாவுக்காக நீங்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள். தொடர்ந்து படியுங்கள்...

அறிமுகமான புதிதில் அஜீத், கார்த்திக், முரளி ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர்தான் மாளவிகா. பின்புஜோதிகா, லைலா, த்ரிஷா புயலில் காணாமல் போய் விட்டார். நீண்ட நாள் தமிழ் ரசிகர்கள் கண்ணில் படாமல்இருந்தவரை பேரழகன் படத்திற்காக கூட்டிவந்தவர்கள்.

அந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு தலை காட்டினார். அதனையடுத்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில்ஸ்னேகாவிற்கு ஜோடியாக ஒரு துக்கடா ரோலில் நடித்தார்.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் அலையோ அலை என்று அலைந்து வேட்டையாடியதில், சத்யராஜின் மகாநடிகன், நடிகர் பாலாவின் சந்துரு, அர்ஜூனின் மணிகண்டா மற்றும் ஒரு சரத்குமார் படங்களில் வாய்ப்புகிடைத்தது.

இதில் எல்லாம் கதாநாயகிகள் வேறு. மாளவிகாவை சும்மா கவர்ச்சிக்காக சேர்த்துள்ளார்கள். அதுவும் ஒரு கிளாமர்டான்ஸ் தந்தால், இலவசமாக ஓரிரு காட்சிகளில் நடிக்கிறேன் என்று கூறித்தான் இந்த வாய்ப்புகளைப்பெற்றுள்ளாராம்.

இந் நிலையில்தான், விவேக்கிற்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. முதலில்அதிர்ச்சியடைந்த மாளவிகா பின்னர் தலையில் அடித்துக் கொண்டே ஓ.கே. சொல்லிவிட்டார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை மெளலி இயக்குகிறார். இது விவேக்கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படமாகும். ஏற்கனவே சொல்லி அடிப்பேன் என்ற படத்தில்சாயாசிங்,தேஜாஸ்ரீ ஆகியோருடன் ஜோடி சேர்ந்து டான்ஸ், பைட் என்று கலக்கி வருகிறார். அடுத்து ஒன்மோர்டைம் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

பி.கு: முன்பு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் மாளவிகாவுக்கு ஜோடியாக அஜய் என்பவர் நடித்தார். அஜய் ஒரு தெலுங்குதயாரிப்பாளரின் மகன். பெரிய இடம் என்பதால் அந்த சமயத்தில் மாளவிகாவுக்கும் அஜய்க்கும் காதல் வந்தது.

கொஞ்ச நாட்கள் ஜோடியாக சுற்றினார்கள். பின்பு என்னவானதோ, மாளவிகா அஜய்யை கழற்றி விட்டார். இப்போதுசினிமாவில் ஊறுகாய் மாதிரி ஆகிவிட்ட மாளவிகா, மீண்டும் அஜய்க்கு தூது விட்டுப்பார்த்தாராம். ஆனால் அவர் கண்டுகொள்ளவேஇல்லையாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil