»   »  ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் செய்தது தப்பு விஷால்

ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் செய்தது தப்பு விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திர கலைவிழா தொடர்பாக விஷால் எடுத்த முடிவு தவறே என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விஸ்வரூபம் 2 பட வேலைகளில் பிசியாக இருந்த கமல் தனது ஆதரவை தெரிவிக்க விழாவுக்கு வந்துள்ளார்.

சரத்குமார்

சரத்குமார்

விஷாலுக்கும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமாருக்கும் ஆகாது என்பது ஊர் அறிந்த விஷயம். அதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விஷால் சிறுபிள்ளைத்தனமாக முடிவு எடுத்துள்ளார்.

ராதிகா

ராதிகா

மலேசியா நட்சத்திர கலைவிழாவுக்கு சரத்குமார், அவரின் மனைவி ராதிகா, மைத்துனர் ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வாணிமா நீங்க மலேசியா வருகிறீர்கள் அல்லவா என்று கேட்ட ரசிகர்களிடம் தங்களை அழைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

முடிவு

முடிவு

விஷால் தான் பழைய பகையை மனதில் வைத்து அவர்களை அழைக்க வேண்டாம் என்றாலும் வயதில் பெரியவரான நாஸர் எப்படி அவர் பேச்சை கேட்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காழ்ப்புணர்ச்சி

காழ்ப்புணர்ச்சி

எதை எடுத்தாலும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இருப்பதே இந்த விஷாலுக்கு வேலையாகிவிட்டது. அரசியலாகட்டும், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க பிரச்சனைகளாகட்டும் என்று நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிசி

பிசி

மலேசியா விழாவுக்கு தங்களை அழைக்காவிட்டாலும் சினிமாவில் தங்களின் பங்கு இல்லை என்றாகிவிடாது என்று ராதிகா தெரிவித்துள்ளார். அவர் வாணி ராணி சீரியலில் பிசியாக உள்ளார்.

English summary
Netizens are saying that actor Vishal has taken a wrong decision by not inviting Sarathkumar, Radhika and Radha Ravi to the Malaysia Natchathira Kalai Vizha. Every body knows that all is not well between Vishal and Sarathkumar over Nadigar Sangam issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X