»   »  மம்முட்டி ரொம்ப 'டைட்'

மம்முட்டி ரொம்ப 'டைட்'

Subscribe to Oneindia Tamil


படு டைட்டாக ஷெட்யூல் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறாராம் மம்முட்டி.


நம்ம ஊர் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் 3 வருடத்திற்கு ஒருமுறைதான் இப்போதெல்லாம் நடிக்கிறார். பாபாவுக்குப் பிறகு 3 ஆண்டுகள் விட்டு ரஜினி நடித்து வந்த படம் சந்திரமுகி. 2 ஆண்டுகள் வெளியான படம் சிவாஜி. அடுத்த படம் எப்போது என்று தெரியவில்லை.

தமிழில்தான் இப்படி. மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எல்லாம் ஓவர் டைம் போட்டு விழுந்து விழுந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வருடத்தின் 365 நாட்களும் அவர்கள் பிசிதான்.

மம்முட்டி தற்போது 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்து அடுத்து வெளியாகப் போகும் படம் நஸ்ரனி. ஜோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் இது.

சமீபத்திய சில படங்கள் மம்முட்டிக்கு காலை வாரி விட்டு விட்டதால், நஸ்ரனி பெரும் ஹிட் ஆகி ஆறுதல் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் மம்முட்டி.

நஸ்ரனி ஷூட்டிங் முடிந்து விட்டது. ரம்ஜானுக்கு ரிலீஸாகிறது. அடுத்து வந்தே மாதரம் படத்தில் (தமிழில் அறுவடை) நடித்து வருகிறார் மம்முட்டி. பங்கஜ் பிலிம்ஸ் ஹென்றி இப்படத்தைத் தயாரிக்கிறார். அதேசமயம், பழசிராஜா படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் மம்முட்டி.

இதுதவிர கதாபரயும்போல் என்ற புதிய படத்திலும் நடிக்க டேட்ஸ் கொடுத்துள்ளார் மம்முட்டி. முகேஷ் தயாரிக்கும் படம் இது. இப்படத்தில் சீனிவாசனும் இருக்கிறார். மம்முட்டிக்கு சமமான வேடமாம் சீனிவாசனுக்கு. மோகன் என்கிற புதுமுகம்தான் இப்படத்தை இயக்கப் போகிறார். சீனிவாசன்தான் திரைக்கதை அமைத்துள்ளார்.

மலையாளத்தில் ரொம்பப் பிரபலமான கதாசிரியர் சீனிவாசன் என்பது நினைவிருக்கலாம். இவரது கதைதான் தமிழில், தங்கர் பச்சான் இயக்கம் பிளஸ் நடிப்பில் வெளியான சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்பது தெரியும்தானே!

படத்தில் சூப்பர் ஸ்டார் அசோக் ராஜ் என்ற கேரக்டரில் நடிக்கிறாராம் மம்முட்டி. பார்பர் பாலன் என்ற கேரக்டரில் வருகிறார் சீனிவாசன். முகேஷும் படத்தில் முக்கிய இடத்தில் வருகிறாராம். வருகிற 20ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தப் படம் தவிர ரஞ்சி பணிக்கர் இயக்கத்தில் உருவாகும் துப்பறியும் திரில்லர் படத்திலும் நடிக்கிறார் மம்முட்டி. இப்படத்துக்கு ரெளத்ரம் என்று முதலில் பெயரிட்டிருந்தனர். தற்போது இதை செளர்யம் என்று மாற்றி விட்னர்.

இப்படம் முழுக்க தமிழ் சினிமா பாணியில் ஒரே பன்ச் டயலாக்குகளாக இருக்குமாம். 10 வருடத்திற்குப் பிறகு ரஞ்சி பணிக்கரும், மம்முட்டியும் மீண்டும் இணைகின்றனராம்.

இப்படி கை நிறைய படம் இருப்பதால் நிற்கக் கூட நேரம் இல்லாமல் படு பிசியாக இருக்கிறாராம் மம்முட்டி.

இவங்கல்லாம் வருடத்திற்குப் பத்து படம் கொடுத்தாலும் ரஜினி ஒத்தப் படத்திலேயே அத்தனை பேரையும் ஓரம் கட்டி விடுகிறாரே. அதுதான் எப்படீன்னே 'பிரியலை' மச்சி!

Read more about: mammootty

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil