லோகேஷ் கனகராஜுக்காக போட்டிப்போடும் 2 ஹீரோயின்கள்?.. ஜெயிலர் மருமகளை ஓகே பண்ணிட்டாரா?

சென்னை: மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் ஏணிப்படியில் ஏறுவது போல தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்புகளை பெற்று 50 கோடி வரை சம்பாதிக்கும் இயக்குநராக மாறியுள்ளார். 8 ஆண்டுகளில் இப்படியொரு அசுர வளர்ச்சியை பல முன்னணி நடிகர்களே பெற்றிருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பக்காவாக பிளான் செய்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்குநர்கள் ஹீரோவாகி வரும் வரிசையில், தானும் ஹீரோவாகி விடலாம் என்றும் டைரக்‌ஷன் டென்ஷன் எல்லாம் இல்லாமல் ஒரு படம் பண்ணலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

Mirna Menon and K Sudha in Talks for Lokesh Kanagaraj s Hero Debut Film
Photo Credit:

அதன் முன்னோட்டமாக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து 'இனிமேல்' என்கிற பாடல் ஆல்பத்திலும் அழகாக நடித்திருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயின் குறித்த பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

கார்த்தி, கமல், ரஜினிக்கு துரோகம்: லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோயினாக கமிட் ஆனாலே கயாத்ரியை போல கழுத்தை அறுத்து கொன்றுவிடுவார் என்கிற பயம் அனைத்து ஹீரோயின்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஸ்ருதிஹாசனிடம் பேட்டியெடுத்த போது கூட, நல்லவேளை என்னை இவர் கொல்லவில்லை எனக் கூறியிருந்தார். கைதி படத்தில் கார்த்திக்கு ஜோடியில்லை, விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியில்லை, கூலி படத்தில் ரஜினிகாந்துக்கும் அதே நிலைமை தான். இப்படி மற்ற டாப் நடிகர்களுக்கு துரோகம் செய்துவிட்டு, தற்போது ஹீரோவாக நடிக்கும் படத்தில் மட்டும் ஹீரோயினை தேடுறாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

புலம்பிய பிரதீப், கேபிஒய் பாலா: யோகி பாபு முதல் சூரி வரை பல காமெடி நடிகர்களுக்கும் ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். வடிவேலுவுடன் நடிக்க கோவை சரளாவே யோசித்த நிலையில், சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான். பிரதீப் ரங்கநாதனும் தனது முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க யாருமே முன்வரவில்லை என்றும் இவானா தான் ஓகே சொன்னார் என்றும் பேசியிருந்தார். டிராகன் படத்தில் அவருக்கு 3 ஹீரோயின்கள் கிடைக்கும் அளவுக்கு அவர் தற்போது வளர்ந்துவிட்டார். கேபிஒய் பாலாவும் சமீபத்தில் இதே புலம்பலை புலம்பியுள்ளார். ஆனால், அந்த கவலையெல்லாம் லோகேஷ் கனகராஜுக்கு இல்லை என்கின்றனர்.

Mirna Menon and K Sudha in Talks for Lokesh Kanagaraj s Hero Debut Film
Photo Credit:

போட்டிப் போடும் 2 ஹீரோயின்கள்: தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க 2 ஹீரோயின்கள் போட்டிப் போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயிலர் மருமகள் ஓகேவா?: மலையாள படமான 'டெரி மேரி' படத்தின் மூலம் ஹீரோயினாக மாறியுள்ள இளம் நடிகை கே. சுதா மற்றும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனன் உள்ளிட்ட இருவரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக நடிக்க எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் இருவரில் யாரை டிக் செய்வது என்பதில் தான் குழப்பம் நீடிப்பதாக கூறுகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X