For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஊரறிந்த உலகநாயகன்.. 62 ஆண்டுகள்.. சினிமா மீது தணியாத காதல் கொண்ட "நாயகன்"!

  |

  சென்னை : யார் என்று தெரிகிறதா.... இவன் தீ என்று புரிகிறதா... விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் மாஸான பாடலில் க்ளாசாக என்டரி ஆன கமலஹாசன் திரைத்துறையில் நுழைந்து இன்றோடு 62 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

  இந்த மகிழ்ச்சியை கமலின் ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டும், 62yearsofkamalism என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

  கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடங்கி, டிஜிட்டல் காலம் வரை, கமலஹாசன் நிகழ்த்திய சாதனையின் சிறு தொகுப்பு.

  பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்... புதிய கூட்டணி? பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்... புதிய கூட்டணி?

  கமல்ஹாசன்

  கமல்ஹாசன்

  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஸ்ரீநிவாசன் ராஜலட்சுமி தம்பதியின் 4-ஆவது மகன் கமல்ஹாசன். வழக்குரைஞர் குடும்பத்தில் பிறந்த கமலின் மீது ஒளிபடரச் செய்தவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

  களத்தூர் கண்ணம்மா

  களத்தூர் கண்ணம்மா

  தென்னகத்துத் திரைவானுக்கு ஏவி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம் என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் கமல்ஹாசன், அந்தப் படத்தில் சுயம்புவாக தந்த நடிப்புக்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன்பின் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் அன்றைய சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசனுடன் நடித்து, அவர்களின் மடிகளில் துள்ளி விளையாடினார். பாலசந்தரால் ‘அரங்கேற்றம்' 1973ம் ஆண்டு வெளியாகி படத்தில் திருப்புமுனை பெற்று, பின்னர் கதாநாயகன் ஆகி, இன்றைக்கு உலகநாயகனாக உயர்ந்து நிற்பது ஊரறிந்த கதை.

  அபூர்வ ராகங்கள்

  அபூர்வ ராகங்கள்

  கமல்ஹாசன், ரஜினிநடித்த "அபூர்வ ராகங்கள்". தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியா ஒரு திரைப்படமாகும். கதை புதுமையானது வித்தியாசமானது. எதார்த்தத்தை மீறிய ஒரு கதையை அதன் தன்மை மாறாமல் இயல்பாக அழகாக கூறி இருப்பார் கே. பாலச்சந்தர்.

  16வயதினிலே

  16வயதினிலே

  தமிழ் சினிமாவில் காதல் இளவரசனாக கமல்ஹாசன் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், வாயில் வெற்றிலையை மென்றுகொண்டு,மூக்குத்தி, விந்தி விந்தி நடக்கும் நடை, கோமண உடை. என்று வெள்ளந்தியான `சப்பாணி' வேடத்தை ஏற்று நடித்திருந்தார் கமல்ஹாசன். ஹீரோவாக பிரகாசித்த காலத்தில், ‘சப்பாணி'யாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சர்யம்தான்.படத்திற்காக எதையும் செய்யும் கமலுக்கு இது எல்லாம் ஜூஜூபி.

  சிகப்பு ரோஜாக்கள்

  சிகப்பு ரோஜாக்கள்

  இளம்வயதில் பெண்களால் பாதிக்கப்பட்ட சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் அச்சு பிசகாமல் நடித்திருப்பார் கமல். திரையுலகில் காதல் இளவரசனாக இருந்த கமலஹாசனுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் சைக்கோ கில்லர். இதுதான்டா கமல் என்று சொல்லவைத்து இன்று வரை கமலின் வரலாற்றில் சிறப்பான திரைப்படங்களில் வரிசையில் இப்படம் நிற்கிறது. இன்னும் ஏராளமான படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

  பன்முக வித்தகன்

  பன்முக வித்தகன்

  கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடங்கி, டிஜிட்டல் காலம் வரை, கமலஹாசன் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் ஏராளம். நடிகர், கதாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மை கொண்டவர். ஹே ராம், சாச்சி 420, விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம்2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.மேலும், விக்ரம், மகாநதி, ஆளவந்தான், ஈநாடு, உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் எனப் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

  பல விருதுகள்

  பல விருதுகள்

  தமிழ், ஆங்கிலம்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு அனைத்தும் மொழிகளிலும் புலமை பெற்ற ஓர் உன்னதக்கலைஞன் கமலஹாசன். ஃபிலிம்ஃபேர், மாநில அரசுகளின் விருதுகள், பத்ம விருதுகள் என தட்டித் தூக்கியது ஏராளம். இந்தியத் திரையுலகம் கண்ட ஒப்பற்ற கலைஞர்களில் கமல் ஹாசனுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதுவரை மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் பெற்ற கமலின் நடிப்புத் திறன் பலரையும் வியக்க வைத்துள்ளது. தனது 62 ஆண்டு கால திரை உலக வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கமல் மேற்கொண்ட பல முயற்சிகள் அவருக்குப் பாராட்டைப் பெற்று தந்துள்ளன.

  புதுமை விரும்பி

  புதுமை விரும்பி

  புதுமை விரும்பியான கமல், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு விஷயங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். தமிழ்த் திரை உலகில் முதன்முதலாக மென்பொருள் மூலம் திரைக்கதை எழுதும் முறையை தேவர் மகன் திரைப்படத்தில் பயன்படுத்தினார். 1994-ஆம் ஆண்டு வெளியான மகாநதி திரைப்படத்தில் இந்திய திரை உலகில் முதன் முதலாக ஆவிட் என்ற படத்தொகுப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. தமிழில் டால்பி ஸ்டீரியோ ஒலி தொழில்நுட்பத்துடன் வெளியான முதல் திரைப்படம், 1995-ல் வெளியான குருதிப்புனல். முன்மாதிரி கலைஞனாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய பெருமைக்குரியவர் கமல்ஹாசன்.

  62yearsofkamalisam

  62yearsofkamalisam

  கமல்ஹாசனின் 62 ஆண்டு கால திரைத்துறை பயணத்தை அவரின் ரசிகர்கள் இணையத்தில் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். சினிமா என்னும் சாம்ராஜ்ஜியம் இருக்கும் வரை கமல்ஹாசனின் புகழ் எட்டுத்திசையிலும் ஓங்கி ஒளித்து அவரின் புகழ்பாடும்.

  English summary
  Kamal Haasan is a one man cinema, Having been in the industry for over half a century, this legendary actor has proved his stealth as a versatile actor.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X