»   »  நீங்க, நான், நம்ம தல, தளபதி.. நெகிழ்ச்சியுடன் தேங்க்ஸ் சொன்ன சிம்பு!

நீங்க, நான், நம்ம தல, தளபதி.. நெகிழ்ச்சியுடன் தேங்க்ஸ் சொன்ன சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு, பல்வேறு தடைகளைத் தாண்டி நாளை வெற்றிகரமாக ரிலீசாகிறது வாலு படம். சிம்பு, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்தை விஜயசந்தர் இயக்கியுள்ளார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரிலீசாகும் சிம்பு படம் என்பதால், அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அஜீத் மற்றும் விஜயின் ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.


தீவிர ரசிகர்...

தீவிர ரசிகர்...

காரணம் சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர். அஜீத் படம் வெளியாகும் போது, தனது படப்பிடிப்புகளைக் கூட ரத்து செய்து விட்டு முதல் காட்சி பார்க்க ஓடி விடுவார்.


சால்ட் அண்ட் பெப்பர் லுக்...

சால்ட் அண்ட் பெப்பர் லுக்...

தனது வாலு படத்திலும் அஜீத்தைக் குறிப்பிட்டு அவர் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் பாடலில் அஜீத்தின் பேவரைட் கெட்டப்பான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறாராம் சிம்பு.


விஜய் என் அண்ணன்...

விஜய் என் அண்ணன்...

இதேபோல், வாலு படம் வழக்குகளைச் சந்தித்து பிரச்சினையில் சிக்கிய போது, ஓடி வந்து உதவியவர் விஜய். இதனால், விஜய் என் அண்ணன் என உருகினார் சிம்பு. எனவே, தம்பி படத்தைப் பார்க்க தளபதியின் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.


டிவிட்டரில் நன்றி...

டிவிட்டரில் நன்றி...

எப்போதும் மோதிக் கொள்ளும் தல, தளபதி ரசிகர்கள் தன் வாலு படத்திற்காக ஒன்றாக இணைந்திருப்பதால் சிம்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். தல, தளபதி ரசிகர்களின் ஆதரவுக்கு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.


ஹேப்பி...

ஹேப்பி...

இது குறித்து அவர் கூறுகையில், ‘தல, தளபதி ரசிகர்கள் என்னுடைய படத்திற்கு ஆதரவு கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தல ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஆதரவு அளித்து வந்துள்ளார்கள். இப்போது, என்னுடைய படத்திற்காக தல, தளபதி ரசிகர்கள் ஒன்றிணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது' என்கிறார்.


என்னுடைய ரத்தம்...

என்னுடைய ரத்தம்...

மேலும், தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு, ‘நீங்கள் என்னுடைய ரத்தம். உண்மையிலேயே உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை.


நீங்க இல்லாம நான் இல்லை...

நீங்க இல்லாம நான் இல்லை...

3 வருட இடைவெளிக்கு பிறகு நான் இங்கு நிற்கிறேன் என்றால் அது உங்களால்தான். நீங்க இல்லாம நான் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தனுஷ் ரசிகர்கள்...

தனுஷ் ரசிகர்கள்...

இந்நிலையில், சிம்புவின் வாலு படத்திற்கு அஜீத், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, தற்போது தனுஷ் ரசிகர்களும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். வாலு படம் வெற்றியடைய சமூக வலைதளங்களில் அவர்கள் தங்களது வாழ்த்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


English summary
Now, that the decks have been cleared for Vaalu, Simbu took to social media to express his gratitude, “Thanks to all the theatre owners who stood by Vaalu and are trying their best in spite of all the issues ... Really touched by the love :)”

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil