Don't Miss!
- News
இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? வட மாநிலத்தவர்கள் அட்டூழியம் அதிகரிப்பு! கொதிக்கும் வேல்முருகன்!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சர்ரு சர்ருன்னு இளநீர் வெட்டும் மாதவன்..மல்டி டேலன்டெட் பர்சன் என்று வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை: அலைபாயுதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் மாதவன், தன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.
அதன் பிறகு என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என்று பல வெற்றி படங்களை கொடுத்தார் மாதவன்.
மேடி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மாதவன், இன்றும் அதே இளமை தோற்றத்துடன் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
ரத்தத்தில் ஃபேஷியல்..ஜூலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு..ஷாக்கான ரசிகர்கள்!

வெற்றி நாயகன்
அலைபாயுதே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கட்டி போட்ட நடிகர் மாதவன் தனது முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அலைபாயுதே படம் வெளியாகி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்களால் பேசட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

தொடர்ந்து ஹிட் கொடுத்த மேடி
அலைபாயுதே படத்திற்கு பிறகு மாதவன் என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மாதவன் நடிப்பில் வெளியான அன்பே சிவம், நளதமயந்தி, பிரியமான தோழி, ஜே ஜே, போன்ற பல படங்கள் இன்றும் பேர் சொல்லும் அளவிற்கு இருக்கின்றது.

விஞ்ஞானியாக மாதவன்
நடிகர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளிவந்தது. அதன் பிறகு இவர் நடித்த மாறா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. சமீபத்தில் நடிகர் மாதவன் சிம்ரன் இணைந்து நடித்த ராக்கெட்ரி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இளநீர் வெட்டும் மேடி
தற்போது மாதவனின் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. நடிகர் மாதவன் இளநீரை சர்ரு சர்ருன்னு வெட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டுகள் மூலம் பதிவு செய்து வருகின்றனர். நீங்க மல்டி டேலன்டெட் பர்சன் என்று புகழ்ந்து வருகின்றனர்.