»   »  பண்டிகை நேரத்தில் அஜீத், விஜய் படங்கள் வெளியிடுவதை முதலில் நிறுத்தணும்: பார்த்திபன்

பண்டிகை நேரத்தில் அஜீத், விஜய் படங்கள் வெளியிடுவதை முதலில் நிறுத்தணும்: பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை காலங்களில் அஜீத், விஜய்யின் படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் கோட்டிட்ட இடங்களை நிரப்புக பட வேலையில் பிசியாக உள்ளார். அவர் இயக்கி வரும் இந்த படத்தின் ஹீரோ வேறு யாரும் அல்ல அவரின் குருவான பாக்யராஜின் மகன் சாந்தனு.

Parthiepan talks about Ajith, Vijay movies' release

இந்நிலையில் அஜீத், விஜய் படங்கள் பற்றி பார்த்திபன் கூறுகையில்,

அஜீத், விஜய்யின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாகின்றன. அதை முதலில் நிறுத்த வேண்டும். அவர்களின் படங்கள் சாதாரண நாட்களில் வெளியானால் கூட அது ரசிகர்களுக்கு பண்டிகை தான்.

பண்டிகை காலங்களில் ரசிகர்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வருவார்கள். அதனால் பண்டிகை நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்தால் அவைகளின் வசூல் நன்றாக இருக்கும் என்றார்.

English summary
Director cum actor Parthiepan said that Ajith, Vijay movies should be stopped from getting released during festive season.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil