»   »  மய்யம், பிக் பாஸ் 2, இந்தியன் 2: கமலின் 'அவ்வை சண்முகி' திட்டம்

மய்யம், பிக் பாஸ் 2, இந்தியன் 2: கமலின் 'அவ்வை சண்முகி' திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் 2, இந்தியன் 2 பற்றி கமல் ஹாஸன் போட்டு வைத்துள்ள திட்டம் பற்றி தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி அரசியல்வாதியாகிவிட்டார்.

அரசியலுக்கு வந்ததால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க மாட்டார் என்று கருதப்பட்டது.

கமலே தான்

கமலே தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே அதன் இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கப் போகிறாராம். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன்

இந்தியன்

ஜூன் 22ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப் போகிறதாம். அதனால் பிக் பாஸை முதலில் முடித்துவிட்டு அதன் பிறகு இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம் கமல்.

செப்டம்பர்

செப்டம்பர்

ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 பட வேலைகளை துவங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் வரை நடக்கும்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

வார இறுதி நாட்களில் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்பதால் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டே இதையும் கமலால் சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

திட்டம்

திட்டம்

அவ்வை சண்முகி படத்தில் கமல் எப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தாரோ அதே போன்று நிஜத்திலும் செய்யப் போகிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.

English summary
Kamal Haasan has planned to concentrate on Bigg Boss 2 TV reality show first as it is starting from june 22nd. He is planning to concentrate on Indian 2 shooting after that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X