»   »  பசங்க 2 பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமையும்- சூர்யா

பசங்க 2 பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமையும்- சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பசங்க 2 படத்திற்காக இயக்குநர் பாண்டிராஜ் நிறைய ஆராய்ச்சி செய்தார் என்று படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

சூர்யா, அமலாபால் நடிப்பில் குழந்தைகளை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் படம் பசங்க 2. முதலில் ஹைக்கூ என்று பெயர் வைத்து பின்னர் பசங்க 2 என்று படக்குழுவினர் பெயரை மாற்றினர்.


Pasanga 2 tell a Beautiful Message to all Parents - Surya

பசங்க படத்தைப் போன்றே இப்படத்தையும் குழந்தைகளை மையமாக வைத்து எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். இந்தப் படத்தைப் பற்றி நடிகர் சூர்யா சமீபத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.


பசங்க 2 படத்திற்காக இயக்குநர் பாண்டிராஜ் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று என்பது பற்றிய ஆராய்ச்சியாக இது அமைந்தது.


குழந்தைகளைப் பற்றிய ஒவ்வொன்றும் அழகானது அவர்களின் உலகமே தனியாக இருக்கிறது. எனது சிறுவயதில் என்னுடைய உலகமே வேறாக இருந்தது ஆனால் இப்போது உள்ள குழந்தைகளின் மனநிலை வேறாக இருக்கிறது.


கிராமத்தில் இருக்கிற குழந்தைகளுக்கும் நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கும் உள்ள வாழ்க்கை முறை முற்றிலும் வேறாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கிற பெற்றோர்கள் வீட்டிற்கு செல்லும்போது ஒரு நல்ல கருத்தை எடுத்துச் செல்வர்.


அவர்கள் குழந்தைகளின் உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்வர். நான் இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடம் மட்டுமே ஏற்று நடித்திருக்கிறேன். இவ்வாறு சூர்யா படம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


சூர்யா, அமலாபால், பிந்து மாதவி நடிப்பில் உருவாகியிருக்கும் பசங்க 2 இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகவிருக்கிறது.

English summary
Actor Surya says in Recent Interview "Pasanga 2 will tell a Beautiful Message to all Parents". Surya, Amala Paul, Bindu Madhavi Starrer Pasanga 2 will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil